Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் ஆட்டோவுக்கு 20 கட்டணம் திருவள்ளூர் நகராட்சி முடிவு

Print PDF

தமிழ் முரசு             28.12.2013

பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் ஆட்டோவுக்கு 20 கட்டணம் திருவள்ளூர் நகராட்சி முடிவு

திருவள்ளூர்:பெரியகுப்பம் பஸ் நிலையத்துக்குள் வரும் ஆட்டோவுக்கு ஒரு நாளைக்கு 20ரூபாய் வசூலிப்பது என்று திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.திருவள்ளூர் நகரமன்ற கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஆணையர் அக்ஷயா, பொறியாளர் பாபு, சுகாதார அலுவலர் மோகன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்னைகள் பற்றி பேசினர்.

இதன்பிறகு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருவள்ளூர் நகரில் நவீன ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கவேண்டும். கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். ஸ்ரீவீரராகவபெருமாள் கோயில் குளத்துக்கு நீர்வர தனி கால்வாய் அமைத்து முழுவதும் தண்ணீர் நிரப்ப வேண்டும். பெரியகுப்பம் பஜாரில் ஆட்டோக்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் நகராட்சி நிதியை பெருக்கும் வகையிலும் பெரியகுப்பம் பஸ் நிலையத்துக்குள் வருகின்ற ஆட்டோவுக்கு ஒரு நாளைக்கு 20  ரூபாய் வசூலிக்க வேண்டும். 17வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீபாலாஜி நகர், இந்திரா நகர் பகுதிகளை மண்டலம் ‘ஏ‘ வில் இருந்து மக்கள் நலன் கருதி பி மண்டலத்துக்கு விதிமுறைகள் படி மாற்றவேண்டும்.திருவள்ளூர்,- திருத்தணி திருத்தலங்களில் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்  உள்பட 55 தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

 

கும்மிடிப்பூண்டியில் 63 நாய்களுக்கு கு.க.

Print PDF

தமிழ் முரசு             28.12.2013

கும்மிடிப்பூண்டியில் 63 நாய்களுக்கு கு.க.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 

 

 

 

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரோட்டில் நடந்துசெல்லும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்களை கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதை கட்டுப்படுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று பேரூராட்சி ஊழியர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் பேரூராட்சியில் 3 வது வார்டில் துவங்கி 13 வார்டுகளில் தெருவில் சுற்றிதிரிந்த நாய்களை பிடித்தனர். இதில் 63 நாய்கள் பிடிபட்டது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மணிவேல் கூறுகையில், இங்கு பிடிக்கப்பட்டுள்ள நாய்களை மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சிகிச்சையளிக்கப்படும். தடுப்பூசி போடப்பட்டு ஒரு வாரத்தில் மீண்டும் அதே இடத்தில் நாய்களை விட்டு விடுவோம் என்றார்.

 

மஞ்சள் தேய்த்து பெண்கள் குளிக்க வேண்டும்: மேயர் அறிவுரை

Print PDF

மாலை மலர்                28.12.2013

மஞ்சள் தேய்த்து பெண்கள் குளிக்க வேண்டும்: மேயர் அறிவுரை
 
மஞ்சள் தேய்த்து பெண்கள் குளிக்க வேண்டும்: மேயர் அறிவுரை

சென்னை, டிச.28 - மாநகராட்சியால் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் பெண்கள் மார்பக புற்று நோய், கர்ப்பபை வாய் புற்று நோய் கண்டறியப்பட்டதை சுட்டிக் காட்டி மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–

மஞ்சள் மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. எனவேதான் முன்னோர்கள் வாழ்வியலோடு தொடர்புபடுத்தி பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும் என்றார்கள். இப்போதெல்லாம் பெண்கள் அதை பின் பற்றுவதில்லை. அவசியம் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும்.

அது பல்வேறு நோய்களை தடுக்கும். அதே போல் ஆண்களும், மஞ்சள் பொடியை உணவில் தினமும் சேர்த்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

 


Page 237 of 3988