Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

Print PDF
தினமணி             28.12.2013

தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டு அவைகளுக்கு கருத்தடை செய்ய கொண்டு செல்லப்பட்டது.

பெருகிவரும் தெருநாய்கள் தொல்லை தொடர்பான புகாரைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தெருநாய்களை பிடித்து அவைகளுக்கு கருத்தடை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் உள்ள ஹேண்ட்ஸ் பார் அனிமல் சேரிடபிள் அமைப்பின் சார்பாக மருத்துவர்கள் மகேந்திரன், கோபி கிருஷ்ணா, செயலாளர் ரஞ்சித்குமார், உதவியாளர்கள்  பிரான்சிஸ், ரஞ்சித் ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ஆனந்தன் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

9 வார்டுகளில் 63 நாய்கள் பிடிக்கப்பட்டு மீஞ்சூரில் உள்ள நாய்கள் அறுவை சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

இந்த நாய்கள் ஒரு வாரம் கழித்து எங்கு பிடிக்கப்பட்டதோ அங்கு கொண்டு வந்து விடப்படும் என்றும் பிற வார்டுகளிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவைகளுக்கும் இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை நடத்தப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் கோ.மணிவேல் தெரிவித்தார்.
 

டிச., 31ல் மாநகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர்            27.12.2013 

டிச., 31ல் மாநகராட்சி கூட்டம்

சேலம்: சேலம் மாநகராட்சியின் மன்றக்கூட்டம் டிசம்பர், 31ம் தேதி நடக்கிறது. ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, கடந்த இரு மாதங்களாக, மாநகராட்சி இயல்புக்கூட்டம் நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து, நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின், இம்மாத இயல்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோகன் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தலைமையில், டிசம்பர், 31ம் தேதி செவ்வாய்கிழமை காலை, 11 மணிக்கு, சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், இயல்புக்கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

தெரு நாய்தொல்லையை கட்டுப்படுத்த அமைச்சர் தலைமையில் ஆலோசனை

Print PDF

தினமலர்            27.12.2013 

தெரு நாய்தொல்லையை கட்டுப்படுத்த அமைச்சர் தலைமையில் ஆலோசனை

புதுச்சேரி: தெரு நாய்களைக் கட்டுப்படுத்த, காப்பகம் அமைப்பது தொடர்பாக நகராட்சி பரிசீலித்து வருகிறது. புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய் தொல்லை உச்சகட்டத்தில் உள்ளது.

இதனால் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை, உள்ளாட்சித் துறை பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அசோக் ஆனந்த், கலெக்டர் தீபக்குமார், கால்நடை துறை இணை இயக்குனர் கணேசன், நகராட்சி ஆணையர்கள் ராஜமாணிக்கம், அழகிரி, டாக்டர்கள் அனந்தராமன், குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேசும்போது ""தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு அதே இடத்தில் விட வேண்டும். விஷம் வைத்து கொல்வது, சுருக்கு வலைபோட்டு பிடிப்பது போன்ற கொடூரமான முறையில் கொல்வதை கைவிட வேண்டும் என்றனர்.நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் பேசும்போது, ""தெருவில் மக்களை அச்சுறுத்தும் நாய்களைப் பிடித்து காப்பகத்தில் அடைக்க நகராட்சி சட்டத்தில் இடம் உள்ளது.

இதன் மூலம் தெருக்களில் நாய்கள் திரிவது தடுக்கப்படும். நாய்களும் பாதுகாக்கப்படும் என்றார்.இருப்பினும் இந்த திட்டத்திற்கு தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தெரு நாய்களை கட்டுப்படுத்த நாய் காப்பகம் அமைப்பது தொடர்பாக மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

 


Page 239 of 3988