Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ.441 கோடியில் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினபூமி            24.12.2013

ரூ.441 கோடியில் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/CM-inagurate-houses(C).jpg 

சென்னை, டிச.24 - சென்னை துரைப்பாக்கம் உள்பட தமிழ்நாடு முழுவதும் ரூ.441 கோடியில் 10,867 குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயகத்தில் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

முதல்வர் ஜெயலலிதா நேற்று (23.12.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, எழில் நகர் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 228 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6000 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 106 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2048 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும் 106 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் பல்வேறு நகர்புறப்  பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 2819 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் திறந்து வைத்தார்.

தமிழகத்தின் நகர்புறக்  குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையினை மேம்படுத்த பல்வேறு வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டப்பணிகளை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் செயல்படுத்தி வருகின்றது. இந்த வாரியத்தின் பணிகள் முதலில் சென்னையிலும் பின்னர் 1984_ஆம் ஆண்டு முதல் படிப்படியாக தமிழகத்திலுள்ள இதர நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சென்னை, எழில் நகர் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 228 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6000 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 106 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2048 அடுக்குமாடி குடியிருப்புகள்; நொச்சி நகரில் 45 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 628 அடுக்குமாடி குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம், அம்மன்குளத்தில் 23 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 792 அடுக்குமாடி குடியிருப்புகள்; புதுக்கோட்டை நகராட்சியில்  மச்சுவாடியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 96 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சந்தைப்பேட்டையில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 84 அடுக்குமாடி குடியிருப்புகள்; திருநெல்வேலி மாநகராட்சியில், வ.உ.சி. நகரில்  5 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 207 அடுக்குமாடி குடியிருப்புகள்;  தூத்துக்குடி மாநகராட்சியில், துரைசிங் நகரில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 78 குடியிருப்புகள்; நாமக்கல் நகராட்சியில், எம்.ஜி.ஆர்.  நகரில் 9 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 342 அடுக்குமாடி குடியிருப்புகள்;  ஓசர் நகராட்சியில்  எழில் நகர் பகுதி_2ல் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகள்; சேலம் மாவட்டம், எருமாபாளையத்தில் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  400 அடுக்குமாடி குடியிருப்புகள்; 

என மொத்தம் 441 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10,867 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.  

இந்தப் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொன்றும்  270 முதல் 357 சதுர அடி கொண்ட பரப்பளவில் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்  முதல் 7 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்  வரையிலான மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்பு ஒவ்வொன்றிலும், ஒரு படுக்கை அறை, சமையலறையுடன் கூடிய ஒரு பல்நோக்கு அறை, குளியலறை, கழிப்பறை ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், தேவைக்கேற்ப சில திட்டப் பகுதிகளில் சமூக கட்டமைப்பு வசதிகளான நூலகம், சிறு கடைகள், நியாயவிலைக் கடைகள், ஆழ்துளை குழாய் கிணறு மற்றும் பூங்கா ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இக்குடியிருப்புகள் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நீர் வழி கால்வாய் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கும்  மற்றும்  மீனவ குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  ஆர். வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் தங்க கலியபெருமாள், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் தலைவர் கு. தங்கமுத்து, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி. சந்திரசேகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

6 மாவட்டங்களில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம்

Print PDF

தினபூமி            24.12.2013

6 மாவட்டங்களில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/CM-Inagurate-Water-Open(C).jpg 

சென்னை, டிச.24 - வேலூர் உட்பட 6 மாவட்டங்களில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்தை 

முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

முதல்வர் ஜெயலலிதா நேற்று (23.12.2013) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 9 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விழுப்புரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார். மேலும், ஈராடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 21 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு குடிநீர்த் திட்டங்களைத்  துவக்கி வைத்தார்.

அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையான அளவு வழங்கப்பட வேண்டும் என்பதும், மக்களின் சுகாதார வசதிகள்  மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் நோக்கமாகும்.

இந்த உயரிய நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில்,  விழுப்புரம் நகராட்சி குடிநீர் அவிவிருத்தித் திட்டம் 9 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இதன் மூலம் 95,439 பேர் பயனடைவார்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் விழுப்புரம் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். 

மேலும், <ரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 10,772 பேர் பயனடையும் வகையில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியாபுரம் பேரூராட்சியில் 7,000 பேர் பயனடையும் வகையில் 24 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்;

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாமூர் மற்றும் 27 குடியிருப்புகளில் 13,756 பேர் பயனடையும் வகையில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்து"ர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர்  மற்றும் 12 குடியிருப்புகளில் 7,357 பேர் பயனடையும் வகையில் 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

வேலூர் மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட சுமைதாங்கி மற்றும் 13 குடியிருப்புகளில் 11,231 பேர் பயனடையும் வகையில் 99 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,86,347 பேர் பயனடையும் வகையில் 16 கோடியே  70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் மேல்புரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 79 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் களியக்காவிளை, கொல்லங்கோடு, மேல்புரம் ஆகிய மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த  சுத்திகரிப்பு நிலையம்; 

என மொத்தம் 21 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்து, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் கே. பணீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சி. விஜயராஜ்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

எண்ணூர் நெடுஞ்சாலை–மணலி சாலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக ரூ.60 கோடியில் மேம்பாலம் மக்கள் கருத்துக்களை மேயர் சைதை துரைசாமி கேட்டறிந்தார்

Print PDF

தினத்தந்தி              23.12.2013

எண்ணூர் நெடுஞ்சாலை–மணலி சாலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக ரூ.60 கோடியில் மேம்பாலம் மக்கள் கருத்துக்களை மேயர் சைதை துரைசாமி கேட்டறிந்தார்

எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக ரூ.60 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மக்களின் கருத்துக்களை மேயர் சைதை துரைசாமி கேட்டறிந்தார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

கலந்தாய்வுக்கூட்டம்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை மூலம் ரூ.60 கோடி மதிப்பிலான பாலங்கள் கட்டும்பணி குறித்த கலந்தாய்வுக்கூட்டம் சென்னை கொருக்குப்பேட்டை, வேலன் நகரில் உள்ள வேலன் திருமண மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஆணையர் டி.ஜி.வினய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை வடசென்னையில் பிரதான சாலையாகும். இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

60 கோடி மதிப்பில்...

இதை கருத்தில் கொண்டு, எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலையில் ரெயில்வே மேம்பாலம் சுமார் 60 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரெயில்வே மேம்பாலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நவீன தொழில்நுட்பத்துடனும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான திட்ட அறிக்கை 4 மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு, பின்னர் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். இதற்கிடையே இதுகுறித்து, அந்த பகுதிகளில் உள்ள வர்த்தக சங்கங்கள், பொதுநலச்சங்கங்கள் ஆகியவைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கருத்துக்களை கேட்டறிந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 242 of 3988