Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கடல் நீரை குடிநீராக்கும் நெம்மேலி திட்டம் 100 சதவீத இலக்கை எட்டி சாதனை: குடிநீர் வாரியம் தகவல்

Print PDF

மாலை மலர்               23.12.2013

கடல் நீரை குடிநீராக்கும் நெம்மேலி திட்டம் 100 சதவீத இலக்கை எட்டி சாதனை: குடிநீர் வாரியம் தகவல்
 
கடல் நீரை குடிநீராக்கும் நெம்மேலி திட்டம் 100 சதவீத இலக்கை எட்டி சாதனை: குடிநீர் வாரியம் தகவல்
சென்னை,டிச.23 - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் தயாரிக்க ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது திட்டமிட்டதை தாண்டி 101 சதவீதம் உற்பத்தியை எட்டி சாதனை படைத்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல் -அமைச்சர் ஜெயலலிதா சென்னை நகர குடிநீர் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னை நகரத்தின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.

அந்த திட்டம் தற்போது 101 சதவீத உற்பத்தியை எய்து சாதனை படைத்துள்ளது. குடிநீர் உற்பத்தியில் இது ஒரு புதிய அத்தியாயம் ஆகும். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம் நெம்மேலியில் குடிநீர் உற்பத்தியை அதிகரிக்கும் பணியில்தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கான போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் சென்னையில் பருவமழை குறைவாக பெய்துள்ளது. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் முழு உத்வேகத்துடன் கடல் நீரை குடிநீராக்கும் நெம்மேலி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெம்மேலி தண்ணீர் சென்னை நகருக்கு தேவையான கணிசமான குடிநீரை வழங்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

7 மாவட்டங்களில் ரூ.21½ கோடியில் குடிநீர்த் திட்டங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF

மாலை மலர்               23.12.2013

7 மாவட்டங்களில் ரூ.21½ கோடியில் குடிநீர்த் திட்டங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்
 
7 மாவட்டங்களில் ரூ.21½ கோடியில் குடிநீர்த் திட்டங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, டிச. 23 - தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையான அளவு வழங்கப்பட வேண்டும் என்பதும், மக்களின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசின் நோக்கமாகும்.

இந்த உயரிய நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில், விழுப்புரம் நகராட்சி குடிநீர் அவிவிருத்தித் திட்டம் 9 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

இதன் மூலம் 95,439 பேர் பயனடைவார்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் விழுப்புரம் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 10,772 பேர் பயனடையும் வகையில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியாபுரம் பேரூராட்சியில் 7,000 பேர் பயனடையும் வகையில் 24 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்;

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாமூர் மற்றும் 27 குடியிருப்புகளில் 13,756 பேர் பயனடையும் வகையில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

காஞ்சீபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் மற்றும் 12 குடியிருப்புகளில் 7,357 பேர் பயனடையும் வகையில் 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

வேலூர் மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட சுமைதாங்கி மற்றும் 13 குடியிருப்புகளில் 11,231 பேர் பயனடையும் வகையில் 99 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,86,347 பேர் பயனடையும் வகையில் 16 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் மேல்புரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 79 குடியி ருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் களியக்கா விளை, கொல்லங் கோடு, மேல்புரம் ஆகிய மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஒருங்கி ணைந்த சுத்திகரிப்பு நிலையம்; என மொத்தம் 21 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்து, கன்னியாகுமரி மாவட்டத் திலுள்ள மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் விஜயராஜ்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் ரூ93 லட்சத்தில் வளர்ச்சித் திட்டம்

Print PDF

தினகரன்           20.12.2013

திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் ரூ93 லட்சத்தில் வளர்ச்சித் திட்டம்

அனுப்பர்பாளையம்,: திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலக்குழு கூட்டம் வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடந்தது.  திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதலாவது மண்டல உதவிஆணையாளர் முகமதுசபியுல்லா  முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் மாரப்பன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ரவிச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), உமாமகேசுவரி (திமுக), மற்றும் அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் விஜயக்குமார்,சுப்பிரமணியம், செந்தில்குமார், கல்பனா, சத்யா, சிதம்பரம், சந்திரசேகரன்,  அதிமுக கவுன்சிலர்கள் சின்னசாமி,  சேகர், ஈசுவரன் செந்தில், பாலசுப்ரமணியம், விஜயகுமார் உள்ளிட்டவர்கள் பேசினர்.

தொடர்ந்து நகர்நல அலுவலர் ராமச்சந்திரன், உதவி ஆணையர் சபியுல்லா ஆகியோர் பேசினர்.

கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து முதலாவது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: காந்திநகரிலிருந்து குமார் நகர் வரை மேம்பாலம் கட்டுவதற்கான ஆக்கபூர்வ ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின்கீழ் சாலைகளை புதியதாக அமைக்கவும், செப்பனிடவும், ரூ.6 கோடியே 65 லட்சம் செலவில் நடைபெற உள்ளது. குடிநீரை பொறுத்த வரை முன் அனுமதி பெற்று உடனுக்குடன் தாமதமின்றி பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  வேலம்பாளையம் மண்டலக்கூட்டத்தில் ரூ.  93 லட்சம் செலவில் வளர்ச்சிப்பணிகள் செய்வதற்காக  108 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன’ என்றார்.

 


Page 243 of 3988