Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கோவையில் ரூ.14¾ கோடி திட்டப்பணிகள் மேயர் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி               19.12.2013

கோவையில் ரூ.14¾ கோடி திட்டப்பணிகள் மேயர் தொடங்கி வைத்தார்

கோவையில் ரூ.14¾ கோடி திட்டப்பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார்.

ரூ.14¾ கோடி திட்டப்பணிகள்

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு மண்டல பகுதிகளில் புதிய சாலை அமைத்தல், சாக்கடை கால்வாய் பாலம் கட்டுதல் உள்ளிட்ட ரூ.14¾ கோடி திட்டப்பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. மேயர் செ.ம.வேலுசாமி இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சின்னசாமி, சேலஞ்சர்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிதாக தொடங்கப்பட்ட திட்டப்பணிகள் மற்றும் அதன் மதிப்பு விவரம் வருமாறு:-

கோவை 39-வது வார்டு துரைசாமி லே அவுட் பகுதி சாலை பணி-ரூ.67 லட்சத்து 50 ஆயிரம். 55வது வார்டு அம்மன்குளம் சாலை, எல்.எம்.எல் காலனி சாலை பணிகள்- ரூ.48 லட்சம், 47வது வார்டு கணபதிபுதூர் சாலை பணி-ரூ.27 லட்சம், 28வது வார்டு நமச்சிவாயம் நகர் சாலை பணி ரூ.57.60 லட்சம்.

சாக்கடை பாலம்

27வது வார்டு சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள அஞ்சுகம் நகர் சாலை பணி-ரூ.27 லட்சம், 64-வது வார்டு சிங்காநல்லூர் பஸ் நிலையம் எதிரில் ரூ.41.85 லட்சம் செலவில் நடை மேம்பாலம்,,பிருந்தாவன் காலனியில் ரூ.30.70 லட்சம், சீனிவாச நகரில் ரூ.66.30 லட்சம், ஜெய்ஸ்ரீ நகரில் ரூ.75 லட்சம், செல்லாண்டியம்மன் நகரில் ரூ.25 லட்சம் செலவில் புதிய சாலைகள்¢ அமைக்கும் திட்டம்.

ரூ.4 கோடி செலவில் 66வது வார்டு கோத்தாரி லேஅவுட் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் கிருஷ்ணா காலனி, ந்துஸ்தான் அவின்யூ, ராஜா நகா,¢ சிறுவாணி நகர், ராஜேஸ்வரிநகர், ராம்கார்டன், வசந்தா நகர் ஆகிய பகுதிகளில் சாலை அமைக்கும் திட்டம், ரூ.1 கோடியே 34 லட்சம் செலவில் 67வது வார்டு ராமநாதபுரம் பாலாஜி நகர், திருவள்ளுவர் நகர் சவுரிபாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் திட்டம், 75வது வார்டு ராமநாதபுரம் பாரதிதாசன் நகர், நேதாஜி நகா,¢ பிஸ்மிநகர், இலாகிநகர், ரமலான்நகர் பாத்திமா நகர், வள்ளல் நகர் பகுதிகளில் ரூ.2 கோடியே 52 லட்சம் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

56வது வார்டு பீளமேடு பாலசுப்ரமணியாநகர், அண்ணா நகர், பெரியார்நகர் பகுதியில் சாலைகள் ரூ.86.40 லட்சம் செலவில் புதிய சாலைகள், 57வது வார்டு மசக்காளிபாளையம் எ.கே.ஜி நகா,¢ முருகன் நகர், ஆண்டாள் நகர் பகுதியில் ரூ.1 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

புதிய கட்டிடம் திறப்பு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 62-வது வார்டு அய்யர் லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.33 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவுக்குமாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும் கவுன்சிலருமான சிங்கை பாலன் தலைமை தாங்கினார்.ஆர்.சின்னசாமி எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார்.புதிய கட்டிடத்தை மேயர் செ.ம.வேலுசாமி திறந்து வைத்தார். மேலும் பாலசுந்தரம் லே அவுட் பகுதியில் மாநகராட்சி பொது நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் திறந்து வைக்கப்பட்டது.

37-வது வார்டு ஸ்ரீநகர் பகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் புதிய நூலகம் கட்டப்பட உள்ளது.இதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட கோவைப்புதூரில் சிறுவர் பூங்காவும் திறந்து வைக்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சிகளில் துணை மேயர் லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத்தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம்,எம்.பெருமாள்சாமி,பி.ராஜ்குமார், சுகாதார குழுத்தலைவர்கள் சாந்தாமணி, ராஜேந்திரன், தாமரைசெல்வி கவுன்சிலர்கள் செந்தில் கார்த்திகேயன், சால்ட் வெள்ளியங்கிரி, முத்துசாமி, சேதுவராஜ், செல்வக்குமார், தமிழ்மொழி, சமீனா அன்வர் மற்றும் அலுவலர்கள், நகர் நல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 21 December 2013 11:07
 

டெங்கு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்            18.12.2013

டெங்கு விழிப்புணர்வு பேரணி

மண்ணச்சநல்லூர், : மண்ணச்சநல்லூர் பேரூ ராட்சி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார் பில் நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியை பேரூராட்சி துணை தலைவர் பொன்னம்பலம் தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித் தார்.  பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

பேரணியில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு அட்டைகளை ஏந்திச் சென்றனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைராஜ், நாகமணி, மோகன்ராஜ், தேவி, அப்துல்மாலிக், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

வணிக வளாகத்திற்கு சீல் வைக்க ஆணையர் உத்தரவிட்டார்

Print PDF

தினகரன்            18.12.2013

வணிக வளாகத்திற்கு சீல் வைக்க ஆணையர் உத்தரவிட்டார்

ஒரு வணிக வளாகத்திற்கு வரி பாக்கி ரூ.44 லட்சம் இருந்தது. இதற்காக மாநகராட்சி நோட்டீஸ் அளித்தும் பயனில்லை. இதனால் அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்க ஆணையர் கிரண்குராலா அதிரடியாக உத்தரவிட்டார். மேற்கு மண்டல உதவி ஆணையர் ரெகோபயாம் தலைமையில் அதிகாரிகள் வணிக வளாகத்தை இழுத்து மூடி சீல் வைக்க சென்றனர். இதனால் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதன் பிறகு ரூ. 11 லட்சத்திற்கு செக் அளித்து, மீத தொகையை ஒரு மாத வாய்தா வாங்கியதின்பேரில் சீல் வைப்பு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

 


Page 247 of 3988