Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அவிநாசியில் நவீன சுகாதார வளாக கட்டடம்

Print PDF

தினகரன்            17.12.2013

அவிநாசியில் நவீன சுகாதார வளாக கட்டடம்

அனுப்பர்பாளையம்,: அவிநாசி பேரூராட்சி 11வது வார்டு கஸ்தூரிபாய் வீதி பகுதியில் ரூ. 12லட்சம் மதிப்பீட்டில், தமிழக அரசின் நிதியிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நவீன சுகாதார வளாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.  பொது மக்களின் பயன்பாடிற்காக இந்த புதிய கட்டிடத்தை அவிநாசி பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள்ராஜசேகர் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்,  துணைத்தலைவர் எம்.எஸ்.மூர்த்தி,  முன்னாள் துணைத்தலைவர் ராஜசேகர், கவுன்சிலர்கள் சாந்தி ராஜேந்திரன், ராஜா மணி,வையாபுரி மற்றும் முத்துசரவனன், மல்லீசுவரன், வேலுசாமி, சிவக்குமார், நாகராஜ், கணேசமூர்த்தி, மனோகர், தண்டபானி, செந்தில், குமார், லட்சுமிமுருகேஷ் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்

Print PDF

தினகரன்            17.12.2013

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்

சென்னை, : வில்லிவாக்கத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடத்தை இடித்து, நிலம் மீட்கப்பட்டது.

வில்லிவாக்கம் பெருமாள் கோயில் தெற்கு மாடவீதியில், சத்துணவு கூடம் உள்ளது. இதன் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை, தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் அந்த நபரிடம் விளக்கம் கேட்டபோது, அது தனது இடம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இதையடுத்து, நேற்று காலை 8வது மண்டல செயற் பொறியாளர் முனியப்பன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிக்கு வந்தனர். பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து, நிலத்தை மீட்டனர்.

ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அதிகாரிகள் வந்ததால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புக் கட்டடம் அகற்றம்

Print PDF

தினமணி              17.12.2013

மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புக் கட்டடம் அகற்றம்

சென்னை வில்லிவாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினர்.

சென்னை வில்லிவாக்கம் தெற்கு மாடவீதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சத்துணவுக்கூடம் உள்ளது.

இது மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இந்த இடத்தில் புதிய சத்துணவுக் கூடம் அமைக்கப்பட்டது.

ஆனால் பழைய சத்துணவுக் கூடம் அப்புறப்படுத்தப்படவில்லை. இதனிடையே இந்த இடத்தை வில்லிவாக்கம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பாரதிபாஸ்கர் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதாகத் தெரிகிறது.

இது குறித்து தகவலறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புக் கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அப்போது பாரதிபாஸ்கர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தடையாணையை நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.

இதனைத்தொடர்ந்து திங்கள்கிழமை காலை போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புக் கட்டடத்தை ஜே.சி.பி. வாகனம் மூலம் அகற்றினர்.

 


Page 249 of 3988