Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் திறப்பு

Print PDF

தினமணி            16.12.2013

சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் திறப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேரூராட்சி நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள புதிய சின்டெக்ஸ் குடிநீர் குழாய்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது.

 மானாமதுரையில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நகரில் 4 ஆவது வார்டில் பழைய போஸ்டாபீஸ் தெரு, 2 ஆவது வார்டில் சி.எஸ்.ஐ பள்ளி காம்பவுண்ட், சிவகங்கை ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் போன்ற இடங்களில் பேரூராட்சியின் பொதுநிதியிலிருந்து ரூ. 3.60 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் குழாய் அமைத்து சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பேரூராட்சித் தலைவர் ஜோசப்ராஜன் திறந்து வைத்தார்.

 இந் நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் முனியசாமி, பரமேஸ்வரி ஆறுமுகம், சோமன், சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டனர். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மானாமதுரை நகரில் மேலும் பல இடங்களில் போர்வெல் குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து சின்டெக்ஸ் தொட்டிகளில் நிரப்பி குழாய் இணைப்புகள் மூலம் சப்ளை செய்யப்படும் என பேரூராட்சித் தலைவர் தெரிவித்தார். 

 

எரிவாயு தகன மேடைக்கு கட்டணம் நிர்ணயம்

Print PDF

தினமணி            16.12.2013

எரிவாயு தகன மேடைக்கு கட்டணம் நிர்ணயம்

தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி எரிவாயு தகன மேடை கட்டணம் நிர்ணயம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் எஸ். முருகேசன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ராஜாராம், நகர்மன்றத் துணைத் தலைவர் காசிமாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நகராட்சி எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவதற்கு நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்தும், பழனிசெட்டிபட்டியில் இருந்தும் கொண்டு வரும் பிரேதங்களுக்கு ஆம்புலன்ஸ் உள்பட சேவைக் கட்டணமாக ரூ.2,400-ம், இதை அடுத்துள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வரும் பிரதேங்களுக்கு கூடுதல் சேவை கட்டணமாக ரூ.500-ம் வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், பொம்மையகவுண்டன்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு நகராட்சி எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எரிவாயு தகன மேடை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய பிரேத வண்டிகளை அப்புறப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.15½ கோடியில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை

Print PDF

தினத்தந்தி            16.12.2013

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.15½ கோடியில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.15½ கோடியில் புதிய தார்சாலைகள் அமைப் பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

பூமி பூஜை

திருப்பூர் மாநகராட்சியில் 3-வது மற்றும் 4-வது மண்டல பகுதியில் சேதமடைந்த தார் சாலைகளை தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மேயர் விசாலாட்சி தலைமை தாங்கினார். கமிஷ னர் செல்வராஜ், துணைமேயர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வனத்துறை அமைச் சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார். விழா வில் மண்டல தலைவர்கள் முத்துச்சாமி, கிருத்திகா, கவுன்சிலர் கீதாஆறுமுகம், மாநகர பொறியாளர் ரவி, உதவி கமிஷனர்கள் கண்ணன், செல்வவிநாயகம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ரூ. 15½ கோடி

3-வது மண்டலத்தில் உள்ள 31-வது வார்டு முதல் 45-வது வார்டு வரை 15 வார்டுகளிலும் மொத்தம் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.8 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுபோல் 4-வது மண்டலத்தில் உள்ள 46-வது வார்டு முதல் 60-வது வார்டு வரை (49, 59-வது வார்டுகள் தவிர) 13 வார்டுகளில் மொத்தம் 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.6 கோடியே 90 லட்சம் மதிப்பில் தார்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 


Page 250 of 3988