Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அடுத்த ஆண்டு நகராட்சி பகுதிகளுக்கு விலையில்லா பொருட்கள்: சம்பத் உறுதி

Print PDF

தினமலர்             16.12.2013

அடுத்த ஆண்டு நகராட்சி பகுதிகளுக்கு விலையில்லா பொருட்கள்: சம்பத் உறுதி

நெல்லிக்குப்பம்:""கல்வியில் முன்னேறினால் தான் ஒரு சமுதாயம் முன்னேற முடியும் என்பதால் இந்த ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது'' என அமைச்சர் சம்பத் பேசினார். நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது.டி.ஆர்.ஓ., மனோகரன் தலைமை தாங்கினார். ஆவின் மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பாலூர் ஊராட்சித் தலைவர் சரவணன் வரவேற்றார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மல்லிகா, ஒன்றிய தலைவர் சுந்தரி, துணைத் தலைவர் சம்பந்தம், மாவட்ட கவுன்சிலர் லோகநாயகி, ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபன், பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன், தாசில்தார் குமுதம், பி.டி.ஓ., துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் சம்பத் பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கிப் @ப”கையில், "இதுபோன்ற விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. நடப்பு ஆண்டில் 2,000 @காடி ரூபாய் மதிப்பில் 35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க உள்ளோம்.

இந்த ஆண்டு கிராமப் பகுதிகள் முழுவதும் கொடுத்து முடிக்கப்படும். அடுத்த ஆண்டு நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும். கல்வியில் முன்னேறினால் தான் ஒரு சமுதாயம் முன்னேற முடியும் என்பதால் இந்த ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இத்திட்டங்களைப் பயன்படுத்தி மக்கள் முன்னேற வேண்டும்' என்றார்.

 

மாநகராட்சியில் 8 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள்

Print PDF

தினமலர்             16.12.2013

மாநகராட்சியில் 8 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில், எட்டு இடங்களில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கடந்த அக்., மாதம் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. அதில், வருவாய்த்துறை, போலீஸ் உயரதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, மக்கள் தொகை அதிகரித்துள்ளதாலும், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாலும், இரவு நேரங்களில், சாலை சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், முக்கிய சந்திப்பு பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநகராட்சி கமிஷனரின் அதிகார வரம்புக்கு உட்பட்டு, 16 மீட்டர் உயரத்தில், உயர்கோபுர மின் விளக்குகளை அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக, தலா 6.75 லட்சம் ரூபாய் அளவுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

பழைய பஸ் ஸ்டாண்டின் மத்தியில் உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில், பஸ் ஸ்டாண்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் புதிதாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுகிறது. குமரன் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை பகுதி, அவிநாசி ரோடு பெரியார் காலனி சந்திப்பு, 15 வேலம்பாளையம் சாலை சந்திப்பு, மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் குளம் பகுதி, பல்லடம் ரோடு தென்னம்பாளையம், காங்கயம் ரோடு பெரியகடை வீதி சந்திப்பு ஆகிய எட்டு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.

இப்பணி மேற்கொள்ள 54 லட்சம் ரூபாய்க்கு கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிக்கு, இன்று நடக்கும் மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கியதும் பணி துவங்கும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இயற்கையின் இலவசம் மழைநீர் சேமிக்க வலியுறுத்தல்

Print PDF

தினமலர்             16.12.2013

இயற்கையின் இலவசம் மழைநீர் சேமிக்க வலியுறுத்தல்

மதுரை: "இயற்கை கொடுத்த இலவசம் மழைநீர். அதை முறையாக சேமித்தால், கோடையில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கலாம்' என மழைநீர் சேகரிப்பு பயிற்சி பட்டறையில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை தானம் அறக்கட்டளை, சென்னை மழை இல்லம் சார்பில், மழைநீர் சேகரிப்பு, பயன்படுத்திய நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்த பயிற்சி கருத்தரங்கு நடந்தது. தானம் வயலக திட்ட தலைவர் கனகவள்ளி, மழை இல்லம் அமைப்பின் இயக்குனர் சேகர் ராகவன் கூறியதாவது: இயற்கை நமக்கு இலவசமாக வழங்கும் மழைநீரை முறையாக சேமிக்காமல் வீணாக்குகிறோம். வெளிநாடுகளில் மழைநீரை தோட்டம், வாகனங்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தும், அவை பராமரிக்கப்படாமல் காலி தொட்டிகளாகவே இருக்கின்றன. சென்னையில் பல வீடுகளில் ஆழ்குழாய், மழைநீர், கழிவுநீர் தேக்கி வைக்கும் வகையில், 3 பிரிவுகளாக தண்ணீர் தொட்டிகளை அமைக்கின்றனர். கழிவுநீரை மறுசுழற்சி செய்து அதை துணி துவைப்பதற்கும், மீண்டும் கழிவறைகளுக்கு பயன்படுத்தவும் முடியும். மக்களுக்கு விழிப்புணர்வு குறைந்து வரும் நிலையில், கட்டுமான பொறியாளர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை எடுத்துரைக்றோம், என்றனர். 

 


Page 252 of 3988