Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மக்களை கவர மாநகராட்சி தெருத்தெருவாக சென்று குறைகளை கண்டறிய உத்தரவு

Print PDF

தினமலர்             16.12.2013

மக்களை கவர மாநகராட்சி தெருத்தெருவாக சென்று குறைகளை கண்டறிய உத்தரவு

சென்னை: சென்னையில் அனைத்துமண்டலங்களிலும், வட்டார துணை கமிஷனர்கள் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், தெருத்தெருவாக சென்று, அந்த பகுதியில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகளை கண்டறிந்து பட்டியலிடவும், சிறுசிறு குறைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் எனவும், மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், 15மண்டலங்கள் உள்ளன. அவை, வடக்கு, தெற்கு, மத்தியம் என, மூன்று நிர்வாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நிர்வாக மண்டலத்திற்கும் பொறுப்பாக, துணை கமிஷனர் நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நேரில் சென்று...

அவர்கள் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைத்து, சென்னையில் ஒவ்வொரு தெருவிலும் என்னென்ன குறைகள் உள்ளன; மக்களுக்கான அடிப்படை தேவைகள் என்ன என்று, கண்டறிய மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.அதன்படி, வார்டு வார்டாக, அனைத்?து தெருக்களுக்கும் அந்த அதிகாரிகள் குழு நேரில் சென்று, சாலைகளின் தரம், தெருவிளக்கு, நடைபாதைகளின் நிலை, மழைநீர் வடிகால்வாய், குடிநீர், கழிவுநீர் பிரச்னை, குப்பை சேகரிப்பு கூடங்களின் நிலை, அந்த தெருவில் உள்ள மாநகராட்சி கட்டடங்களின் நிலை, அங்கு கிடைக்கும் சேவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யும்.

சிறப்பு திட்டங்கள்

அதில் காணப்படும் குறைபாடுகள் பட்டியலாக தயாரிக்கப்படும் இவ்வாறு, தெரு வாரியாக குறைபாடுகளை பட்டியலிட்டு, அவற்றில் காணப்படும் சிறுசிறு குறைகளை உடனுக்குடன் பணியாளர்களை கொண்டு சரிசெய்யவும், மற்றபடி மக்களின் தேவைகளை, முறையான ஒப்பந்தம் மூலம் செய்து தரவும் வட்டார துணை கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வரும் மார்ச் மாதம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இது குறித்து மேயர், கமிஷனர் தலைமையில் ஆய்வுகூட்டங்கள் நடத்தப்பட்டு ள்ளன.அறிவிப்புகளை தவிர, மக்களின் தேவைகளை களத்திற்கு சென்று அறிந்தால் தான், சில பணிகளை மேற்கொள்ள, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முடியும். இதற்காகவே துணைகமிஷனர்கள் தலைமையில் தெருத்தெருவாக சென்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

'கவுன்சிலர்களால் முடியாது'

நாளொன்றுக்கு எத்தனை தெருக்கள் அதிகமாக ஆய்வு செய்ய முடியுமோ செய்து, மூன்று மாதங்களில் இப்பணியை நிறைவேற்ற ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.வழக்கமாக, இந்த பணிகளை, கவுன்சிலர்களை கொண்டு தான் செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் முழு ஈடுபாட்டுடன் செய்வதில்லை என்பதால், அதிகாரிகள் குழு களம் இறங்க உள்ளது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.தெருத்தெருவாக சென்று மக்கள் குறைகளை கண்டறியும் பணி, மார்ச் மாத பட்ஜெட்டை கருத்தில் கொண்டு தான் என, மாநகராட்சி தரப்பில் கூறப் பட்டாலும், லோக்சபா தேர்தல் நெருங்குவதால், மக்களை கவர மாநகராட்சி இந்த வியூகத்தை வகுத்துள்ளதாகவே தெரிகிறது.

 

பயணிகள் காத்திருப்பு அறைகளுடன் ரூ2.5 கோடியில் நவீனமாகிறது மேட்டுப்பாளையம் பஸ்நிலையம்

Print PDF

தினகரன்           14.12.2013

பயணிகள் காத்திருப்பு அறைகளுடன் ரூ2.5 கோடியில் நவீனமாகிறது மேட்டுப்பாளையம் பஸ்நிலையம்

மேட்டுப்பாளையம், : பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையம் நகராட்சி பஸ்நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லாமல் உள்ளது. 

எனவே இந்த பஸ்நிலையத்தை ரூ.2.5 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இந்த திட்டத்தின் கீழ், மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தில் கோவை, திருப்பூர், சத்தியமங்கலம், ஈரோடு பஸ்நிறுத்தம் பகுதியில் உள்ள தார் சாலைகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக புதிய பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட உள்ளது. பழைய கழிப்பறைகளை இடித்து விட்டு புதிதாக நவீன வசதியுடன் கழிப்பறைகள் கட்டப்படும்.

பொருள் வைப்பறை, ஆண், பெண் பயணிகள் காத்திருப்பு அறை, பெண்களுக்கு தனியாக காத்திருப்பு அறை சகல வசதிகளுடன் புதிதாக கட்டப்பட இருக்கிறது. மேலும் அனைத்து கட்டிடங்களும் பழுது பார்க்கபட்டு மேல் பகுதியில் டைல்ஸ் ஒட்டப்பட உள்ளது.

இந்தப் பணிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் இளங்கோவன், துணைத்தலைவர் ரமாசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணியை எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, வெள்ளிங்கிரி, உசேன், சூரியபிரகாஷ், நாகஜோதி, மோகன்ராஜ், தனபாக்கியம், ராதா, ஜெகநாதன், மகேந்திரன் மற்றும் நகராட்சி மேலாளர் சித்தார்த், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வராஜ், செந்தில்குமார், அதிமுக நகர செயலாளர் வான்மதி சேட், மாணவர் அணி மாவட்ட செயலாளர் நாசர், சந்தானம் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

முடிவில் உதவி பொறியாளர் சண்முகவடிவு நன்றி கூறினார்.

மேலும் 6, 7வது வார்டுகளில் ரூ.22 லட்சத்தில் நவீன கழிப்பறை, வெள்ளிபாளையம் ரோட்டில துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.70 லட்சத்தில் 8 வீடுகள் கட்டவும் இந்த விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

 

ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணிகள் கோட்ட மேலாளர் ஆய்வு

Print PDF

தினத்தந்தி            14.12.2013

ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணிகள் கோட்ட மேலாளர் ஆய்வு

திருப்பூர் ரெயில் நிலை யத்தில் சுமார் ரூ.2 கோடியில் நடந்து வரும் மேம்பாட்டு பணி களை கோட்ட மேலா ளர் நேற்று ஆய்வு மேற் கொண்டார்.

கோட்ட மேலாளர் ஆய்வு

டாலர் சிட்டியான திருப் பூரில் ரெயில் போக்குவரத்து முக்கிய இடம் பிடித்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் பனியன் வர்த்தகம் தொடர் பாக வருபவர்கள் ரெயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதிகப்படியான மக்கள் பயன்பாட்டில் உள்ள திருப் பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேம்பாட்டு பணிகளை மேற் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரா மரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணி களை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ் நேற்று காலை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.2 கோடியில் பணிகள்

ரெயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தின் நுழைவு வாயில் புதிதாக அமைப்பு, முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கான ஓய்வறை கட்டுதல், பிளாட்பாரங்கள் விரிவாக்கம், பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, குடி நீர் வசதி, சுற்றுச்சுவர் கட்டு தல், ரெயில் நிலையத்தின் முன்புறம் உள்ள பகுதிகள் புணரமைப்பு, பார்சல் பகு தியை புதிதாக வடிவமைத்தல் போன்ற பணிகள் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் நடந்து வரு கிறது.

இந்த பணிகளை கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ் ஆய்வு செய்தார். இந்த ஆய் வின் போது கோட்ட பொறி யாளர்கள், துணை மேலாளர் கள், திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

 


Page 254 of 3988