Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்வு!

Print PDF

தினமலர்             13.12.2013 

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்வு!

சென்னை:'பருவ மழைக்குப்பின், சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நிலத்தடி நீரில் இருந்த உப்புத்தன்மை அளவும் குறைந்துள்ளது' என, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், மழைநீர் வீணாவதை தடுக்கும் வகையில், வீடுகள், கட்டடங்கள் தோறும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க, தமிழக அரசு, 2003ம் ஆண்டில் உத்தரவிட்டது. அதன்படி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன.

சென்னையில் மட்டும், எட்டு லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன. பருவ மழைக்கு முன், சீரமைக்க வலியுறுத்தி, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பருவ மழைக்குப்பின், பகுதி வாரியாக, குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதோடு, குடிநீரில் கரைந்திருந்த உப்புத்தன்மையின் அளவும் குறைந்துள்ளது தெரிய வந்து
உள்ளது.

சென்னையில், பொதுவாக, 4.20 மீட்டராக இருந்த நிலத்தடிநீர் மட்டம், 0.80 மீ்ட்டர் அளவு உயர்ந்து, 3.40 மீட்டர் என்ற அளவில் உள்ளது. அதிகபட்சமாக, ஆலந்துார் - 2.65 மீட்டர்; பெருங்குடி-1.80, அடையாறு-1 மீட்டர் அளவுக்கு நிலத்தடி மட்டம் அதிகரித்து உள்ளது.

ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார், திருவொற்றியூர், மணலி மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் உப்புத்தன்மை, 1,200 பி.பி.எம்., (பாஸ் பர் மில்லியன்) அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது போன்று நிலத்தடி நீர் மட்டம் உயர, பொதுமக்கள் தொடர்ந்து, மழைக்காலத்திற்கு முன், கட்டமைப்புகளை பராமரிக்க வேண்டும் என, சென்னைக்குடிநீர் வாரியம் வலியுறுத்தி உள்ளது.

பகுதி வாரிய நிலத்தடிநீர் மட்ட விவரம்

பகுதி நிலத்தடி நீர் கிடைக்கும் ஆழம் (மீட்டர்) உயர்வு (மீட்டர்) உப்புத்தன்மை அளவு (பிபிஎம்)
பருவ மழைக்கு முன் பின் பருவ மழைக்கு முன் பின்

  • திருவொற்றியூர் 3.15 2.70 0.45 2,100 900
  • மணலி 3.80 2.85 0.95 1,900 700
  • மாதவரம் 3.60 3.10 0.50 1,200 400
  • தண்டையார்பேட்டை 3.90 3.60 0.30 1900 900
  • ராயபுரம் 5.60 4.90 0.70 2,100 1000
  • திரு.வி.க.,நகர் 2.30 2.10 0.20 1,800 700
  • அம்பத்துார் 2.40 1.90 0.50 1,900 800
  • அண்ணா நகர் 4.00 3.60 0.40 1,800 700
  • தேனாம்பேட்டை 4.35 3.90 0.45 1,500 600
  • கோடம்பாக்கம் 5.10 4.45 0.65 1,600 500
  • வளசரவாக்கம் 4.90 3.95 0.95 1,500 500
  • ஆலந்துார் 7.45 4.80 2.65 1,700 400
  • அடையாறு 4.60 3.60 1.00 1,600 400
  • பெருங்குடி 6.00 4.20 1.80 2,100 800
  • சோழிங்கநல்லுார் 1.90 1.60 0.30 1,800 500
 

இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து

Print PDF

தினமலர்             13.12.2013

இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து

சென்னை:சென்னையில் வசிக்கும் இடம் பெயர்ந்தவர்களின் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, நாளை, சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:

சாலையோரம் வசிப்போர், நரிக்குறவர்கள், கழைக்கூத்தாடிகள், பணி நிமித்தம் இடம் பெயர்வோர், செங்கல் சூளையில் பணிபுரிவோர், கட்டுமான தொழிலாளர்கள் என, சென்னையில் வசிக்கும் இந்த வகையை சேர்ந்தவர்கள், அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டே உள்ளனர்.

அவர்களின் குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசிகள் போடப்படுவது இல்லை. இதனால் இந்த குழந்தைகளை அடையாளம் கண்டு ஒவ்வொரு ஆண்டும், சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, சென்னையில் இடம் பெயர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளாக, 725 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

அங்கு வசிப்போரின், ஐந்து வயக்குட்பட்ட, 1,283 குழந்தைகளுக்கு நாளை (14ம் தேதி) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக, மாநகராட்சி சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. இவ்வாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.

 

ஆம்பூர் நகராட்சி பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

Print PDF

தினத்தந்தி           12.12.2013

ஆம்பூர் நகராட்சி பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

ஆம்பூர் அழகாபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஜேசி தலைவர் விஸ்வநாத் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்று பேசினார்.

நகரசபை உறுப்பினர் கராத்தே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஜேசி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

 


Page 257 of 3988