Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டுகோள்

Print PDF

தினகரன்           12.12.2013

கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டுகோள்

புதுச்சேரி, : கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுவை சுகாதாரத்துறை செயலர் ராகேஷ்சந்திரா வெளி யிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையின் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கு விட்டுவிட்டு மழை பெய்வதாலும், வரும் காலங்களில் மழை பெய்ய இருப்பதாலும் மேலும் புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மக்களிடையே ஒரு சில இடங்களில் உள்ளதாலும் பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீட்டிலும், வீட்டை சுற்றிலும் மற்றும் பொது இடங்களிலும் தேவையற்ற பழைய டயர்கள், உடைந்த பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள், ஆட்டுஉரல்கள் மற்றும் தேங்காய் ஓடுகள், சிமெண்ட் தொட்டிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்கி அதில் டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் அப்புறப்படுத்துமாறும், காய்ச்சல் இருப்பின் அருகிலுள்ள அரசு மருத் துவமனைகளில் மருத்துவர் ஆலோசனையை பெற்று பயன்பெற வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் காய்ச்சல் அனைத்தும் டெங்கு காய்ச்சல் அல்ல. காய்ச்சல் இருப்பின் மருத்துவ ஆலோசனை அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

பல்லடத்தில் 1200 டயர்கள் அழிப்பு

Print PDF

தினகரன்           12.12.2013

பல்லடத்தில் 1200 டயர்கள் அழிப்பு

பல்லடம், : திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சல் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட துணை இயக்குனர் ரகுபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலையில் வட்டார மேற்பார்வையாளர் சண்முகநாதன், துப்பு ரவுஆய்வாளர் சரவணன், சுகாதாரஆய்வாளர்கள் முத்துபையன், தமிழ்ச்செல்வி, ரகுநாதன், ஜெயராமன். துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பனப்பாளையம், நால்ரோடு, அண்ணாசிலை, செட்டிபாளையம்ரோடு உள்ளிட்ட பகுதியில் அதிரடியாக சோதனை செய்து சுமார் 1200க்கும் மேற்பட்ட டயர்களை அழித்தனர்.

 

புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா

Print PDF

தினகரன்           12.12.2013

புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா

திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி 59வது வார்டுக்கு உட்பட்ட சின்னாண்டிபாளையத்தில் கோவை பாராளுமன்ற உறுப் பினர் நிதியில் இருந்து ஒதுக்கிய ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு கவுன்சிலர் வசந்தாமணி வரவேற்றார். கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். திருப்பூர் மேயர் விசாலாட்சி, ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பழனிச்சாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

 மேயர் விசாலாட்சி பேசுகையில் ‘தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி திருப்பூரில் உள்ள 60 வார்டுகளையும் ஒருங்கிணைத்து மாநகராட்சியாக மாற்றப்பட்ட 2 ஆண்டுகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

 ஊராட்சியாக இருந்த பல பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு ஏற்கனவே நகராட்சி பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிகளின் நிதி மூலமாக குறிப்பாக 59வது வார்டு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடியே 85 லட்சத்து 23 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளன’ என்றார்.

 


Page 259 of 3988