Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பேருந்து நிலைய மேம்பாட்டுப்பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி              10.12.2013

பேருந்து நிலைய மேம்பாட்டுப்பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 1.17 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை நகர்மன்றத் தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

நகராட்சி நூற்றாண்டு விழாவுக்காக புதுக்கோட்டையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு ரூ. 50 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கியது.

இதையடுத்து பேருந்து நிலையத்தில் சேதமடைந்துள்ள சிமென்ட் தரைத்தளம், கட்டடங்களை சீரமைக்கும் பணிக்காக ரூ. 1.17 கோடி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டது.

பணிகளை துரிதமாக மேற்கொள்ள வசதியாக, இங்கு வந்து செல்லும் பேருந்துகள் அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரேயுள்ள தாற்காலிக பேருந்து  நிலையத்துக்கு அண்மையில் இட மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து காலியாக உள்ள பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணி தொடங்கியுள்ளது.

இப்பணிகளை, நகர்மன்றத் தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான், நகரமைப்பு அலுவலர் பெரியசாமி ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.

நகர்மன்ற உறுப்பினர்கள் கே. ராமதாஸ், பி. கண்ணன், தியாகராஜன், பி. கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ஓமலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் சீருடையில் மாற்றம்

Print PDF

தினமணி              10.12.2013

ஓமலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் சீருடையில் மாற்றம்

தினமணி செய்தி காரணமாக, ஓமலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம்,  ஓமலூர் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் அரைக்கால் சட்டை அணிந்து பணியாற்றுவது தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகத் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை மையப்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டை என்ற நிலையிலிருந்து, முழுக்கால் சட்டை (பேண்ட்) என்ற மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

ஏற்காடு இடைத் தேர்தல் முடிவுற்ற நிலையில், திங்கள்கிழமை முதல் துப்புரவுப் பணியாளர்கள் புதிய சீருடையை அணிந்து பணியைத் தொடங்கினர்.

எனினும் பெரும்பாலான இடங்களில் துப்புரவுப் பணியாளர்கள் வெறும் கைகளாலேயே கழிகளை அகற்றி தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

 துர்நாற்றம் வீசும் குப்பைகளை அள்ளும் போது, பாதுகாப்பு முகக் கவசம், கையுறை, கால்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு முழங்கால் வரையிலான காலணிகள் இல்லாததால் காலால் குப்பையை ஒன்று சேர்த்து வெறுங்கைகளாலேயே அள்ளி நகரத்தை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

குறைந்தபட்ச ஊதியமாக இருந்தாலும் நகரத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்வதில் இவர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.

இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி செய்து கொடுப்பதுடன் சுகாதாரம், பணி பாதுகாப்பும் வழங்கினால் மேலும் திறம்பட பணியாற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை.

 

உடுமலை 14 -ஆவது வார்டில் நகராட்சித் தலைவர் ஆய்வு

Print PDF

தினமணி              10.12.2013

உடுமலை 14 -ஆவது வார்டில் நகராட்சித் தலைவர் ஆய்வு

உடுமலை நகராட்சி 14 ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

உடுமலை நகராட்சி, 14 வது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுக் குடிநீர் குழாய்களில் குடிநீர் சரிவர வருவதில்லை எனவும், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந் நிலையில் உடுமலை நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர், இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், குடிநீர் விநியோகம் சீரமைப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா பொதுமக்களிடம் உறுதி அளித்தார். ÷நகர்நல அலுவலர்(பொ) எம்.இளங்கோவன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஹக்கீம், ஆ.ஆதம்ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 


Page 264 of 3988