Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 50 கிலோ இறைச்சி பறிமுதல்

Print PDF

தினகரன்                09.12.2013

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை 50 கிலோ இறைச்சி பறிமுதல்

கோவை, :கோவை  மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலை யோரம் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றன. சாலை யோரம் 3 கம்புகளை நட்டி அதில் ஆடு, கோழி இறைச்சிகளை தொங்க விட்டு விற்பனை செய்கின்றனர். 

சுகாதாரமற்ற முறை யில் இறைச்சி விற்பனை செய்வதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. மாநகராட்சி அனுமதி பெறா மல் இறை ச்சி விற்ப னை செய்தால் அவற்றினை பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை செய்தும், அதனை பொருட்படுத்தாமல் பிராதன சாலை களின் ஓரத்தில் திறந்த வெளியில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை தொடர்ந்து மாநகராட்சி  கால்நடை மருத்துவரும், மிருகசாலை இயக்குநருமான டாக்டர் அசோகன் தலைமையில் மேற்பார்வையாளர் ஸ்ரீராம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 5 பேர் நேற்று  கவுண்டம்பாளையம் முதல் துடியலூர் வரை சாலையோரங்களில் திறந்த வெளி யில் இறைச்சி விற்பனை செய்த கடை களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

10 இறைச்சி கடைக ளில் நடைபெற்ற இச்சோதனையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என மாநகராட்சி கால்நடை மருத்துவர் அசோகன் தெரிவித்தார்.

 

ராசிபுரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை

Print PDF

தினமணி               09.12.2013

ராசிபுரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை

  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி சார்பில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசின் சீருடை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், நகராட்சியில் பணிபுரியும் துப்புரவாளர்களுக்கான சீருடைகளை நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் வழங்கினார். மொத்தம் 119 பணியாளர்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சீருடைகள் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், நகராட்சி மேலாளர் வே.சண்முகம், துப்புரவு அலுவலர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை

Print PDF

தினமணி               09.12.2013

பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை

குமாரபாளையம் நகராட்சி நாராயணா நகர் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பல் பரிசோதனை, சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது.

குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சங்கத் தலைவர் ஆர்.அசோகன் தலைமை வகித்தார். சம்பு பல் மருத்துவமனை மருத்துவர் டி.இளவரசு, ஸ்ரீ சிவசக்தி பல் மருத்துவமனை மருத்துவர் எஸ்.பரத், மருத்துவக் குழுவினர் பல் பரிசோதனை, சிகிச்சை அளித்தனர்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு பல் நோய், தற்காத்தல், பல் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 378 பேருக்கு இலவச பல் பசை, பிரஷ் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கச் செயலர் பி.பிரகாசன், பொருளாளர் எஸ்.கதிர்வேல், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் என்.ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 267 of 3988