Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சாமிசெட்டிபாளையத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய வடிகால் வசதி

Print PDF

தினமணி             07.12.2013

சாமிசெட்டிபாளையத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய வடிகால் வசதி

பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட சாமிசெட்டிபாளையத்தில் ரூ.25 லட்சத்தில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள 6, 7-ஆவது வார்டுகளைச் சேர்ந்த பெரிய கிணறு வீதி, முருகன் மளிகை வீதி, தபால் நிலைய வீதிகளில் நீண்ட காலமாக வடிகால் வசதி குறைவாகவே இருந்தது. சவுடம்மன் கோவில் வீதி குறுகலாக இருந்ததால் அதில் இதுவரை வடிகால் வசதி செய்யப்படவில்லை. இப்பகுதி மக்கள் கழிவு நீரைத் தங்களுக்குச் சொந்தமான இடத்திலேயே தேக்கி வைத்திருந்தனர். இதையடுத்து, புதிய வடிகால் வசதி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பொது நிதியின் கீழ் வடிகால் அமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான பூமிஜையை பேரூராட்சித் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

வார்டு கவுன்சிலர்கள் ஹரி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் தண்டபாணி, பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

டிச.10இல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமணி             07.12.2013

டிச.10இல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆதார் அட்டைக்கான இரண்டாம்கட்ட புகைப்படம் எடுக்கும் பணி டிச.10ஆம் தேதி துவங்க உள்ளதாக சிவகங்கை நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன் தெரிவித்தார்.

 வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது: 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,025 பேர் சிவகங்கை நகராட்சிப் பகுதிகளில் உள்ளனர். இவர்களுக்கு ஆதார் அடையாள அட்டைக்காக முதல் சுற்றில் 23,058 பேர் புகைப்படம் எடுத்துள்ளனர். டிச.10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற உள்ள இரண்டாம் கடட புகைப்படம் 16,491 பேருக்கு எடுக்கப்பட உள்ளது.

 நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்கள் மூலம் விடுபட்டவர்கள் கணக்கெடுப்பு வீடுதோறும் நடத்தி அவற்றைத் தொகுத்து மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்படும். இதன்பின்னர் விடுபட்டவர்கள் பற்றிய விவரங்கள் கணினியில் தொகுக்கப்படும். இவர்கள் ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்க வரும்போது ஒப்புகைச் சீட்டு இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றின் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் நகலுடன் புகைப்படம் மையங்களுக்குச் சென்று படம் எடுத்துக் கொள்ளலாம்.

 சிவகங்கை வார்டு எண் 1 முதல் 5 வரை டிச.10, 11ஆம் தேதி, வார்டு எண் 6 மற்றும் 7ல் டிச.11 மற்றும் 12ஆம் தேதி, வார்டு எண் 8 முதல் 11 வரையிலானவர்களுக்கு டிச.12 மற்றும் 13ஆம் தேதிகளிலும், வார்டு எண் 12 மற்றும் 13ல் உள்ளவர்களுக்கு 13 மற்றும் 14ஆம் தேதிகளிலும், வார்டு எண் 14 முதல் 18 வரையிலானவர்களுக்கு டிச.14 மற்றும் 15ஆம் தேதிகளிலும், வார்டு எண் 19 மற்றும் 20ல் உள்ளவர்களுக்கு டிச.15 மற்றும் 16ஆம் தேதியும், வார்டு எண் 21 முதல் 25 வரையிலானவர்களுக்கு டிச.16 மற்றும் 17ஆம் தேதிகளிலும், வார்டு எண் 26 மற்றும் 27ல் உள்ளவர்களுக்கு டிச.17 மற்றும் 18ஆம் தேதிகளிலும் புகைப்படம் எடுக்கப்படும்.

 பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜபாண்டி (செல் 9600992860), அல்லது மேற்பார்வையாளர் சரவணன் (செல் 9715326370) ஆகியோரைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என நகர்மன்றத் தலைவர் அர்ச்சுணன் தெரிவித்தார்.

 

அம்பத்தூர் மண்டலத்தில் மருத்துவக் கண்காட்சி

Print PDF

தினமணி             07.12.2013

அம்பத்தூர் மண்டலத்தில் மருத்துவக் கண்காட்சி

சென்னை மாநராட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பத்தூர் மண்டலத்தில் மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் கண், பல், தோல், மார்பகப் புற்றுநோய், டெங்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இது தொடர்பாக மருத்துவக் கண்காட்சியும் நடைபெற்றது. இதில், நோய்கள் வராமல் தடுக்கும் முறைகள், நோய் பாதித்தால் மேற்கொள்ள வேண்டிய சிகிக்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இம்முகாமை சென்னை மாநகர சுகாதார அதிகாரி டாக்டர் குகானந்தம் தொடங்கி வைத்து பேசியது:

சென்னை முழுவதும் 200 இடங்களில் மருத்துவ முகாம் நடைப்பெறுகிறது.  இந்த முகாம் 5-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறும். நாளொன்றுக்கு 200 இடங்கள் என 5 நாட்களில் 1000 மருத்துவ முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டல அதிகாரி ராஜேந்திரன், மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் லட்சுமிதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 271 of 3988