Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குடியாத்தத்தில் ராபின்சன் குளம் சீரமைப்பு பணிகள் நகராட்சி தலைவர் அமுதா நேரில் ஆய்வு

Print PDF

தினத்தந்தி             07.12.2013

குடியாத்தத்தில் ராபின்சன் குளம் சீரமைப்பு பணிகள் நகராட்சி தலைவர் அமுதா நேரில் ஆய்வு

குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் சுமார் 7.61 ஏக்கர் பரப்பளவில் ராபின்சன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றி தூர்வாரி, மழைநீர் சேகரிப்பு, சுற்றிலும் பூங்கா, விளையாட்டு திடல், நடைபாதை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

ராபின்சன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற அரசின் தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரோட்டரி சங்கத்தின் பங்களிப்புடன் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் குப்பை தூர்வாரும் பணி தொடங்கியது. தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அரசின் கட்டமைப்பு, இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதி மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு, கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளது. இதில் தற்போது ரூ.30 லட்சம் செலவில் குளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.அமுதா நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது ஆணையாளர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி, நகரமன்ற துணை தலைவர் மோகன்ராஜ், கவுன்சிலர்கள் எஸ்.கே.சுரேஷ், வி.என்.கார்த்திகேயன், கம்பன், ரவி, ஏ.கார்த்தி, பணி மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ஆவடி நகராட்சி பகுதிகளில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கியது

Print PDF

தினத்தந்தி             07.12.2013

ஆவடி நகராட்சி பகுதிகளில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கியது

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் உத்தரவின் பேரில் ஆவடி நகராட்சி கமிஷனர் மோகன் தலைமையில் சுகாதார அலுவலர் பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று காலை ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல், மீன் கடை, பூ கடை, காய்கறி கடை, பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மற்றும் பயன்படுத்திக்கொண்டிருந்த 40 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள சுமார் 125 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றினார்கள்.

‘‘ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஒரு வார காலம் இந்த பணிகள் நடைபெறும்’’ என கமிஷனர் மோகன் தெரிவித்தார்.
 

அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகத்தில் 2 வாரத்தில் 75 ஆயிரம் இட்லி விற்பனை

Print PDF

மாலை மலர்              07.12.2013

அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகத்தில் 2 வாரத்தில் 75 ஆயிரம் இட்லி விற்பனை
 
அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகத்தில் 2 வாரத்தில் 75 ஆயிரம் இட்லி விற்பனை
 
சென்னை, டிச.7 - ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகத்தை கடந்த 20–ந்தேதி முதல்– அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

புறநோயாளிகள், உள்நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் இந்த உணவகத்தை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரி வளாகத்தில் குறைந்த விலையில் காலை, மதியம் உணவு கிடைப்பதால் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று உணவருந்தி செல்கிறார்கள். வரிசையை ஒழங்குப்படுத்தும் பணியில் போலீசாரும் அங்கு ஈடுபட்டு வருகிறார்கள்.

சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு ‘சுடச்சுட’ வழங்கப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழ்நாட்டிலேயே பெரிய உணவகமாக இது செயல்பட்டு வருகிறது. 6000 சதுர அடியில், இயங்கும் ஒரே உணவகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. உணவகம் தொடங்கி 15 நாட்களில் 75 ஆயிரம் இட்லி இங்கு விற்பனை ஆகியுள்ளது. 13 ஆயிரம் பொங்கல், 18 ஆயிரம் சாம்பார் சாதம், 8 ஆயிரம் தயிர் சாதம் விற்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘அம்மா உணவகத்தில்’ சப்பாத்தி மாலை நேரத்தில் வழங்கப்பட உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 10 நாளில் சப்பாத்தி விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவத்தில் இரவு நேரத்தில் டிபன் கிடைக்காமல் வெளியே சென்று வாங்க வேண்டி உள்ளது. சப்பாத்தி விற்பனை தொடங்கிவிட்டால் 3 வேளையும் குறைந்த செலவில் சாப்பிட முடியும். அதனால் சப்பாத்தி விற்பனை எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

 


Page 272 of 3988