Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திமிரியில் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்

Print PDF

தினத்தந்தி          06.12.2013

திமிரியில் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்

வேலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோர் உத்தரவின்பேரில் திமிரி மற்றும் விளாப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம் திமிரி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு திமிரி, விளாப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர்கள் புவனேஸ்வரி, செல்விராமசேகர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மனோகரன், முகம்மத்ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமையில் டாக்டர்கள் தணிகைவேல், லட்சுமணன் ஆகியோர் இந்த கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் 50–க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் கலைச்செல்வி, சுந்தரமூர்த்தி, சாவித்ரி உள்பட பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளின் மீது நடவடிக்கை மேயர் தகவல்

Print PDF

தினத்தந்தி          06.12.2013

வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளின் மீது நடவடிக்கை மேயர் தகவல்

வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளின் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

அனுமதி

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் வீட்டுமனைகளை அமைத்து (ரியல் எஸ்டேட்) விற்பனை செய்பவர்கள் முன்னதாக மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும் என்கிற விதி உள்ளது. அனுமதி பெற்றால்தான் அந்த வீட்டுமனைகள் அமைந்துள்ள பகுதிக்கு சாலை வசதி, குடி நீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்பட பல்வேறு வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்து கொடுகப்படும். மேலும் அனுமதி சான்றிதழ் இல்லாமல் அந்த மனைகளில் வீடுகள் கட்ட வங்கிகளும் கடன் வழங்காது.

இந்த நிலையில் வேலூர் மாநகரத்தில் பல இடங்களில் மாநகராட்சியின் அனுமதியில்லால் மனைகளை விற்க இருப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

அகற்றப்பட்டன


அதைத்தொடர்ந்து மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் நேற்று வேலூர் 1–வது மண்டலத்தில் அடங்கிய கழிஞ்சூர், திருவள்ளுவர் நகர், பழைய காட்பாடி, பர்னீர்ஸ்புரம் மற்றும் 2–வது மண்டலத்தில் அடங்கிய சத்துவாச்சாரி ஆகிய இடங்களுக்கு சென்றனர். அங்கு அவர்கள் மாநகராட்சி அனுமதி பெறாமல் வீட்டுமனைகள் இருந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அளவு கற்கள், போர்டுகள் போன்றவற்றை அகற்றினார்கள்.

அது பற்றி மேயர் கூறும்போது, வீட்டுமனை அமைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மாநகராட்சியிடம் அனுமதி பெறவேண்டும், அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வேண்டாம்

அதுபோல மாநகராட்சி அனுமதி பெறாத மனைகளை பொதுமக்கள் வாங்கி பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினார். அப்போது மண்டலக்குழுத் தலைவர்கள் ஏ.பி.எல். சுந்தரம், சுனில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

டெங்கு ஒழிக்க டயர்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்         06.12.2013

டெங்கு ஒழிக்க டயர்கள் பறிமுதல்

அனுப்பர்பாளையம்,: சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, டெங்கு கொசு ஒழிப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவிநாசி பகுதியில் சாலையோரம் உள்ள இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன பஞ்சர் கடைகளின் முன்புறம் ரோட்டோரமாக சேமித்து வைத்திருக்கும் உபயோகமற்ற பழைய டயர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் இருந்து இரு சக்கர வாகன டயர்கள் 221, சைக்கிள் டயர்கள்132,  லாரி டயர்கள் 8 உள்பட 361 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவிநாசி வட்டார தலைமை மருத்துவர் ராமசாமி, சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாலர்கள ரமே ஷ்,செல்வ ராஜ்,பரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பாலதண்டபானி, சுகாதார மேஸ்திரி ரவி மற்றும் பேரூராட்சி சுகாதார பனியாளர்கள் பங்கேற்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உபயோகமற்ற 361டயர்கள் அவிநாசி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

 


Page 274 of 3988