Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குடிநீர் கட்டணம் கட்டாததால் 25 வீடுகளில் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தமிழ் முரசு         06.12.2013

குடிநீர் கட்டணம் கட்டாததால் 25 வீடுகளில் இணைப்பு துண்டிப்பு

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.  வீடுகளுக்கு 1001 குடிநீர் இணைப்புகள் உள்ளன. முறையாக குடிநீர் கட்டணம் செலுத்தாததால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு இரண்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இருப்பினும் சிலர் சரிவர குடிநீர் கட்டணம் கட்டவில்லை.

இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு பயன்படுத்தும் நபர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கட்டணத்தை செலுத்துமாறு பேரூராட்சி நிர்வாகம் வற்புறுத்தியது.

ஆனாலும் 999 இணைப்பு தாரர்கள் பணம் கட்டவில்லை. இதனால் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாஸ், துப்புரவு மேற்பார்வையாளர் மதியழகன், பேரூராட்சி ஊழியர்கள், பொன்னேரி போலீஸ் உதவியுடன் 1&வது வார்டுக்கு உட்பட்ட சின்னகாவனம் பகுதியில் 25 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் கட்டணம் கட்டாத நபர்கள் உடனடியாக கட்ட வேண்டும் அல்லது இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 5 நாள் சிறப்பு மருத்துவ முகாம்: மேயர் தொடங்கி வைத்தார்

Print PDF

மாலை மலர்         06.12.2013

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 5 நாள் சிறப்பு மருத்துவ முகாம்: மேயர் தொடங்கி வைத்தார்
 
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 5 நாள் சிறப்பு மருத்துவ முகாம்: மேயர் தொடங்கி வைத்தார்

சென்னை, டிச.6 - முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சென்னை மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாம் 9–ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

வார்டுக்கு தினமும் ஒரு முகாம் என்ற அடிப்படையில் 200 வார்டுகளிலும் 5 நாட்களில் 1000 முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த மருத்துவ முகாமில், காசநோய், மலேரியா, நீரழிவுநோய், இருதயநோய, சிறுநீரக கோளாறு, ரத்த அழுத்தம், ரத்த சோகை நோய், கருப்பை வாய் புற்றுநோய், டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக சிகிச்சையும், மருந்துகளும் அளிக்கப்படுகிறது.

அமைந்தகரை புல்லா அவென்யூ மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் விக்ரம்கபூர் முன்னிலை வகித்தார்.

நகராட்சி நிர்வாகங்களின் செயலாளர் பணிந்தரரெட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முகாமை தொடங்கி வைத்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–

சென்னை மாநகர மக்களின் நலனில் முதல்– அமைச்சர் அம்மா அவர்கள் தனி கவனம் செலுத்தி வருகிறார். தொலைநோக்கு பார்வையில் புதிய திட்டங்களை வகுப்பதில் அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை.

இந்த மருத்துவ முகாமில் 190 மாநகராட்சி மருத்துவ மனையை சேர்ந்த 170 டாக்டர்கள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மழைக்காலத்தில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நோய்களுக்கு எந்தவித செலவும் இல்லாமல் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 5 நாட்களிலும் 1000 முகாம் நடக்கிறது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அலோபதி மருந்தை விட நிலவேம்பு கசாயம், பப்பாளி இலை சாறு போன்ற சித்த மருந்துதான் சிறந்தது என்று மருத்துவர்களின் ஆய்வு அறிக்கை பெற்று அதனை நமது முதல்வர் நடைமுறைப்படுத்தினார். இதனால் அந்த நோய் பாதிப்பு கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. மும்பையில் 6 ஆயிரம் பேரும், கொல்கத்தாவில் 4700 பேரும், பெங்களூரில் 4500 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் சென்னையில் 150 பேர் பாதிப்படைந்தனர்.

இந்த முகாம் மூலம் சென்னை நகரைச் சேர்ந்த 15 லட்சம் பேர் பயனடைவார்கள்.

இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.

பின்னர் பள்ளியில் நடந்த முகாமை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் பெஞ்சமின், எம்.எல்.ஏ.க்கள் கோகுல இந்திரா, கலைராஜன், இணை ஆணையர் ஆனந்த், மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் பழனி, சுகாதார அதிகாரிகள் டாக்டர் முருகானந்தம், துணை அதிகாரி தங்கராஜு, கவுன் சிலர்கள் சுகுமார்பாபு, வேளாங்கண்ணி, அமீர் பாஷா, ஜீவாதீனன், பவானி சங்கர், வசந்தா, தாடி ம.ராசு, அண்ணா தொழிற்சங்க தலைவர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சியில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்

Print PDF

தினமணி           06.12.2013

மாநகராட்சியில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்

மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி (இடமிருந்து 3-வது). உடன் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். கோகுல இந்திரா, வி.பி. கலைராஜன், துணை மேயர் பா. பெஞ்சமின், நிலைக்குழு உறுப்பினர் (சுகாதாரம்) ஆ. பழனி உள்ளிட்டோர் உள்ளனர்.
மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி (இடமிருந்து 3-வது). உடன் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். கோகுல இந்திரா, வி.பி. கலைராஜன், துணை மேயர் பா. பெஞ்சமின், நிலைக்குழு உறுப்பினர் (சுகாதாரம்) ஆ. பழனி உள்ளிட்டோர் உள்ளனர்.

சென்னை மாநகராட்சி நடத்தும் இலவச மருத்துவ முகாம்கள் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாம் மூலம் சுமார் 20 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்களை அனைத்து வார்டுகளிலும் நடத்துகிறது.

டிசம்பர் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் டிச. 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமை, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

செனாய் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் துணை மேயர் பா. பெஞ்சமின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். கோகுலஇந்திரா, வி.பி. கலைராஜன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) ஆ. பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு முகாம்களில் 160 மாநகராட்சி மருத்துவர்கள், 2,000 உதவி மருத்துவ ஊழியர்கள், 700-க்கும் மேற்பட்ட தனி மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் 3 அரசு மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் 15 தனியார் மருத்துவமனைகளும் இதில் பங்கேற்றுள்ளன.

முதன்மை முகாம்கள்: 15 இடங்களில் நடைபெறும் முதன்மை முகாம்களில் சிறந்த மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர். முகாம்களில் பெறப்படும் அனைத்து தகவல்களும் கணினி மூலம் அட்டவணைப்படுத்தப்படுகின்றன.

மேலும் வார்டுக்கு 5 குடிசைப் பகுதிகள் வீதம் 1,000 குடிசைப் பகுதிகளில் முகாம்கள் நடப்படும்.

இதில் 1.5 லட்சம் சுய உதவிக்குழு அமைப்புகளின் மகளிர் மற்றும் குடும்பத்தினர், அங்கன்வாடி குழந்தைகள், 1 லட்சம் வீடற்ற மக்கள், 25,000 மாநகராட்சி ஊழியர்கள், 1.5 லட்சம் ஹோட்டல் தொழிலாளர்கள், கோயம்பேடு, மெரீனா கடற்கரை சிறு வியாபாரிகள், இடம் பெயர்ந்து சென்னையில் வசிப்போர் உள்ளிட்ட சுமார் 20 லட்சம் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

முதல் நாளில் 86 ஆயிரம் பேர் பயன்

மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாமில் முதல் நாளில் மட்டும் சுமார் 86 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்.

200 இடங்களில் (வார்டுக்கு ஒன்று) நடைபெற்ற இந்த முகாம்களில், 27,735 ஆண்கள், 36,946 பெண்கள், 13,798 சிறுவர்கள், 7,761 சிறுமிகள் என முதல் நாளில் மட்டும் மொத்தம் 86,240 பேர் பயன்பெற்றனர்.

முதன்மை முகாம் இடமாற்றம்

இந்த சிறப்பு மருத்துவ முகாம்களின் ஒரு பகுதியாக மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 முதன்மை முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த முகாம்கள் தினமும் ஒரே இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதன்மை முகாம், லாயிட்ஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெறும். மற்ற முதன்மை முகாம்களின் இடம் மாற்றப்படவில்லை.

 


Page 275 of 3988