Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கழிவுநீர் குழாய்களில் வலை பொருத்தும் பணி

Print PDF

தினகரன்           05.12.2013 

கழிவுநீர் குழாய்களில் வலை பொருத்தும் பணி

புதுச்சேரி, :   புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஜெ.ஜெ.நகரில் உள்ள வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் குழாய்களுக்கு கொசு வலை பொறுத்தும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் முனுசாமி, உதவி திட்ட அதிகாரி இரிசன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிகுழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் பெருகி வரும் கொசுக்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி பொன்விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உழவர்கரை நகராட்சியில் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜெ.ஜெ.நகரில் கழிவு நீர் குழாய்களில் கொசு வலை பொறுத்தும் பணியை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் மூலம் செயல்படுத்தும் பணி துவக்கப்பட்டது. இதே போன்று புதுவையின் அனைத்து பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ள உள்ளது.

 

டெங்கு ஒழிக்க டயர்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்           05.12.2013 

டெங்கு ஒழிக்க டயர்கள் பறிமுதல்

அனுப்பர்பாளையம்,: சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, டெங்கு கொசு ஒழிப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவிநாசி பகுதியில் சாலையோரம் உள்ள இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன பஞ்சர் கடைகளின் முன்புறம் ரோட்டோரமாக சேமித்து வைத்திருக்கும் உபயோகமற்ற பழைய டயர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் இருந்து இரு சக்கர வாகன டயர்கள் 221, சைக்கிள் டயர்கள்132,  லாரி டயர்கள் 8 உள்பட 361 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவிநாசி வட்டார தலைமை மருத்துவர் ராமசாமி, சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாலர்கள ரமே ஷ்,செல்வ ராஜ், பரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பாலதண்டபானி, சுகாதார மேஸ்திரி ரவி மற்றும் பேரூராட்சி சுகாதார பனியாளர்கள் பங்கேற்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உபயோகமற்ற 361டயர்கள் அவிநாசி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

 

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

Print PDF

தினகரன்           05.12.2013 

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

திருச்சி, : திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.

திருச்சி மாநகராட்சியில் மாநகர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மரியம் ஆசிக், நகரப் பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்பு அகற்றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழிவறை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 9 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பழுதடைந்த தெரு விளக்குகளை விரைந்து பழுது நீக்கம் செய்திடவும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு முழுமையான நடவடிக்கை எடுப்பதோடு இதுகுறித்து மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற்பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஷ், உதவி ஆணையர்கள் ரெங்கராஜன், தனபால், தயாநிதி, பிரபுகுமார் ஜோசப், உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், கண்ணன், அமுதவள்ளி, லெட்சுமணமூர்த்தி, திட்டப்பிரிவு உதவி செயற்பொறியாளர்கள் சிவபாதம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


Page 276 of 3988