Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மேச்சேரி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகளிலும் தவாக கொடியேற்றுவிழா

Print PDF

தினகரன்          02.12.2013

மேச்சேரி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகளிலும் தவாக கொடியேற்றுவிழா

மேட்டூர், : மேச்சேரி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகளிலும் கொடியேற்றுவிழா நடத்துவது என தவாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மேச்சேரி நகர ஆலோசனை கூட்டம் நகர தலைவர் கோவிந்தன் தலைமையில் நடந்தது. செயலாளர் பழனிசாமி வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் காமராஜ் சிறப்புரையாற்றினார். சேலம் மாவட்ட செயலாளர் வீராசாமி, மேச்சேரி ஒன்றிய அமைப்பாளர் ஜெகநாதன், நங்கவள்ளி அமைப்பாளர் குமார், மேட்டூர் நகர தலைவர் மணி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், மேச்சேரி பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் கொடியேற்றுவிழா நடத்துவது, சேலத்தில் பிப். 2ம் தேதி நடைபெறும் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது, மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததை கண்டித்து போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேச்சேரி நகர துணைத்தலைவர்கள் துரைப்பாண்டி, பச்சியப்பன், பொருளாளர் கோவிந்தன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாயாண்டி உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா

Print PDF

தினகரன்          02.12.2013

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா

திருச்சி, : திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் குழந்தைராஜன் தலைமையில் நடந்தது.

மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் நீலமேகம், மாவட்ட செயலாளர் இளங்கோவன், அதிமுக வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியை மார்கெரட் விக்டோரியா வரவேற்றார். அன்னபூரணி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி துணை மேயர் மரியம் ஆசிக் மீரா பங்கேற்று மாவட்ட அளவில் நடந்த போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் அடுத்த ஆண்டு அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகரும், சர போஜி கல்லூரி ஆங்கில பேராசிரியரான பாஸ்கர் சிறப்புரையாற்றினார். மக்கள் சக்தி இயக்க மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர், மாந கர பொருளாளர் வாசுதேவன், துணை மேயர் மரியம் ஆசிக் மீரா ஆகியோர் சென்ற ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவர்களுக்கு பரிசு, புத்தக்கங்களை வழங்கி னர். விழாவில் மக்கள் சக்தி இயக்க மாநகர நிர்வாகிகள் செல்லக்குட்டி, சூரியமூர்த்தி, ஆசிரியைகள் சந்திராதேவி, அருணா, மரினா, ரீனா, ராணி, கார்த்திகா, ஜோதி, ஜெயா, ஆசிரியர்கள் இளங்கோவன், கவிபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

 

ரூ.20.30 லட்சத்தில் நாய்கள் அறுவை சிகிச்சை அரங்குவிரைவில் அமைக்க ஏற்பாடு

Print PDF

தினகரன்          02.12.2013

ரூ.20.30 லட்சத்தில் நாய்கள் அறுவை சிகிச்சை அரங்குவிரைவில் அமைக்க ஏற்பாடு

திருச்சி, : திருச்சி மாநகராட்சி  சார்பில் கொட்டப் பட்டில் ரூ.20.30 லட்சம் செலவில் நாய்கள் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அரங்கு அமைக் கும் பணி விரைவில் துவங்குகிறது.

திருச்சி மாநகராட்சி யில் உள்ள 4 கோட்டங்களி லும் நாய்கள் தொல்லை அதிகமாகி விட்டது. இதனால் பலர் பாதிக்கப் பட்டு வருகின்ற னர். இத னால் திருச்சி மாநகராட்சி பகுதியில் பிடிக்கப்பட்ட நாய்களை திருவளர்ச்சோலைக்கும், பனையபுரத்திற் கும் இடையில் கொள்ளிட கரையில் விட்டுவிட்டனர். இதில் பல நாய்கள் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று அச்சுறுத்துகிறது.

இதனால் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், நாய் களை பிடித்து இனப்பெருக்க கட்டுப்பாடு செய்வது என்று முடிவு செய்தது. அதற்காக கொட்டப்பட் டில் துப்புரவு பணியாளர் கள் குடியிருப்பு அருகில் ரூ.20.30 லட்சம் மதிப்பில் நாய்கள் இனக்கட்டுப் பாட்டு அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க முடிவு செய்தது. அதன்படி நாய் கள் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க பணி யாணை தயாரிக்கும் பணி யில் இறங்கியுள்ளது.

இந்த பணி விரைவில் துவங்க உள்ளது. ‘எங்கள் பகுதியில் ஏற்கனவே நாய்கள் தொல்லை அதிகம். பிடித்து  வரும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து எங்கள் பகுதியில் விட் டால் மேலும் தொல்லை அதிகமாகும். எனவே எங் கள் பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க வேண்டாம்‘ என்று 38வது வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த பகுதியில் இருந்து நாய் களை பிடிக்கிறதோ, அந்த பகுதியிலேயே நாய்களை விட்டுவிடுவோம் என்று உறுதியளித்துள்ளனர். இதனால் மிக விரைவில் கொட்டப்பட்டில் நாய்க ளின் இன கட்டுப்பாட்டை தடுக்க, அறுவை சிகிச்சை அரங்கு அமைகிறது. 

 


Page 284 of 3988