Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி             29.11.2013

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

லால்குடியில் நடந்த புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் சுதாராணி தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கரோலின், வட்டார மருத்துவ அலுவலர் பிரபா முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூக்கன், மருத்துவ வள மேற்பார்வையாளர் சாமிதுரை, சுகாதார ஆய்வாளர் செந்தில் ஆனந்த், சமுதாய சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று காந்தி சிலையில் முடிவடைந்தது. முன்னதாக சுகாதார ஆய்வாளர் பாண்டியன் வரவேற்றார். நிறைவில் சுகாதார ஆய்வாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

 

திருவள்ளுவர் பல்கலை. கல்விக் குழு உறுப்பினராக வேலூர் மேயர் நியமனம்

Print PDF

தினமணி             29.11.2013

திருவள்ளுவர் பல்கலை. கல்விக் குழு உறுப்பினராக வேலூர் மேயர் நியமனம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு உறுப்பினராக வேலூர் மாநகராட்சி மேயர் பி.கார்த்தியாயினி நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான பி.பழனியப்பன் பரிந்துரையின் பேரில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு உறுப்பினர்களாக வேலூர் மாநகராட்சி மேயர் பி.கார்த்தியாயினி மற்றும் விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரிச் செயலர் எஸ்.செந்தில்குமார் ஆகியோரை அரசு நியமித்துள்ளது.

இவர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள். இவர்கள் இருவரின் நியமனத்தை அடுத்து பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 65-ஆக உள்ளது என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.குணசேகரன் தெரிவித்தார்.

 

20 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பயணிகள் நிம்மதி

Print PDF

தினமணி             29.11.2013

20 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பயணிகள் நிம்மதி

பவானி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாள் முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பவானி பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் பெங்களூர், கோவை, சென்னை, வேளாங்கன்னி உள்பட பல்வேறு ஊர்களுக்கும் செல்ல 300-க்கும் அதிகமான பேருந்துகளும், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்து செல்வர்.

பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பாக அடுக்கி வைக்கப்பட்ட பொருள்களின் ஆக்கிரமிப்பால் பேருந்துக்கு வரும் பயணிகள் நடக்கக் கூட முடியாத நிலை இருந்தது. கடைக்காரர்களின் எல்லைமீறிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில், கோபி சார் ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி, திடீரென ஆய்வு செய்தபோது பயணிகள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். பல இடங்களில் அடிப்படைத் தேவைகள் குறித்து விசாரித்த சார் ஆட்சியர், உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

இதனால், அரசியல் தலையீடுகளைத் தாண்டி பவானி நகராட்சி அதிகாரிகள் களமிறங்கினர். பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டன. காலையில் வெளியூர் சென்றுவிட்டு மாலையில் பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு வேறெங்காவது வந்து இறங்கிவிட்டோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு அதிகாரிகளின் நடவடிக்கை அமைந்திருந்தது.

இந்த அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றத்தால் மின்சாரம் தாக்கியதுபோன்று அதிர்ச்சிக்குள்ளான கடைக்காரர்கள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கடைகளின் கதவுகளையே இப்போதுதான் பார்த்ததாக வேதனையுடன் தெரிவித்தனர். ஒதுக்கப்பட்ட கடைக்குள் மட்டுமே பொருள்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் எனவும், வெளியே வைத்தால் உரிமையாளர்களுக்கு பொருள்கள் சொந்தமாக இருக்காது எனவும் நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து சென்றுள்ளனர்.

20 ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர போதுமான இருக்கைகள் ஏற்படுத்துவதோடு, மேற்கூரையில் படிந்துள்ள குப்பைகளை அகற்றி, அனைத்து பகுதிகளுக்கும் வெள்ளையடித்து சுத்தப்படுத்த வேண்டும் என்று பயணிகளும், பேருந்து ஓட்டுநர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


Page 289 of 3988