Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குடியாத்தம் நகராட்சியில் வரிபாக்கி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது

Print PDF

தினத்தந்தி             28.11.2013

குடியாத்தம் நகராட்சியில் வரிபாக்கி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது

குடியாத்தம் நகராட்சியில் வரி பாக்கி வைத்துள்ளர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அத்துடன் கடைகளுக்கு சீலும் வைக்கப்பட்டது.

வரிபாக்கி

குடியாத்தம் நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் வரி, கடை வரி மற்றும் இதர இனங்களில் பாக்கி வைத்துள்ளர்கள் பலமுறை பாக்கி தொகைகளை செலுத்த அறிவுறுத்தியும் செலுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று நகராட்சியில் 12, 13 மற்றும் 14–வது வார்டு பகுதியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி உத்தரவின்பேரில் மேலாளர் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் கவிதா, நகராட்சி அலுவலர்கள் தாமோதரன், தீனதயாளன், செல்வம், ராம்குமார், சங்கர், ஸ்ரீதர் உள்ளிட்ட பணியாளர்கள் மொத்தமாக ஒவ்வொரு இடத்திற்கும் சென்று வரி வசூலில் ஈடுபட்டனர்.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

அப்போது வரி பாக்கி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்புகளை துண்டித்தனர். மேலும் கடைகளுக்கும் சீல் வைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து நேற்று சுமார் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வரி பாக்கி தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி கூறுகையில், நகராட்சியில் தொடர்ந்து வாரத்தில் 2 நாட்களில் பணியாளர்கள் மொத்தமாக சென்று வரி பாக்கி வசூலிப்பிலும், சீல் வைப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

 

பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி             28.11.2013

பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பவானி பஸ்நிலையத்தில் உள்ள நடைபாதையில் வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். அதனால் பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் குடிநீர் தொட்டி மற்றும் கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டன. அதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கோபி உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரியிடம் புகார் மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து உதவிகலெக்டர், பவானி பஸ்நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நகராட்சி ஊழியர்களிடம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள கடைகளை அகற்றும் படி உத்தரவிட்டார். அதன்பேரில் ஊழியர்கள் நேற்று காலை 11 மணி அளவில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

அதைத்தொடர்ந்து பவானி பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கும், நடந்து செல்வதற்கும் இடவசதி உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறினர்.

 

விதி மீறிய கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. சீல்

Print PDF

தினமணி             28.11.2013

விதி மீறிய கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. சீல்

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 இது குறித்து சி.எம்.டி.ஏ. வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் வாகன நிறுத்தம் மற்றும் 2 அடுக்கு குடியிருப்பு கட்ட சென்னை மாநகராட்சியிடம் கட்டட உரிமையாளர் அனுமதி வாங்கியுள்ளார்.

 ஆனால் அவர் தரைத் தளத்துடன் கூடிய 3 அடுக்குகளை வணிக பயன்பாட்டுக்காக கட்டினார். இது குறித்த அறிந்த அதிகாரிகள், பணி நிறுத்த நோட்டிஸை உரிமையாளரிடம் அளித்தனர்.

 ஆனால் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இதனையடுத்து சீல் வைப்பதற்கான நோட்டிஸ் கடந்த ஜூலை மாதம் அளிக்கப்பட்டது. இதற்கும் உரிமையாளர் செவி சாய்க்காததால், கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் புதன் கிழமை சீல் வைத்து பூட்டினர்.

 


Page 293 of 3988