Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி             28.11.2013

வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்

கோவையில் வாடகை செலுத்த தவறிய ஐந்து கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரியில்லாத இனங்களின் கீழ் ஒதுக்கீடு பெற்ற மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு தொடர்ந்து வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் க.லதா எச்சரித்திருந்தார்.

அதன்படி, மாநகராட்சிக்கு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வாடகை செலுத்தாத கடை உரிமைதாரர்களுக்கு அறிவிப்பு அனுப்பியும் வாடகை நிலுவை தொகையினை செலுத்தாத 5 கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்படும் கடைகளுக்குச் செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகையினை உடனடியாகச் செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகளில் இருந்து தவிர்த்துக் கொள்ளலாம் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

 

இன்றும் நாளையும் உடுமலையில் குடிநீர் விநியோகம் இருக்காது

Print PDF

தினமணி             28.11.2013

இன்றும் நாளையும் உடுமலையில் குடிநீர் விநியோகம் இருக்காது

உடுமலையில் நவம்பர் 28 மற்றும் 29 (வியாழன், வெள்ளி) ஆகிய இரண்டு நாள்கள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

 திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை நகரம் வரை குடிநீர் கொண்டு வர அமைக் கப்பட்டுள்ள இரண்டாவது குடிநீர்த் திட்ட பிரதானக் குழாய்களில் போடிபட்டி, அண்ணா நகர், பள்ளபாளையம் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

 இவற்றைச் சரி செய்யும் வகையில் உடுமலை நகரம் முழுவதும் நவம்பர் 28 மற்றும் 29 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு நாள்கள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. இதனால், குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், குடிநீரை காய்ச்சிப் பருகுமாறும் வேண்டப்படுகின்றனர்.

 

பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

Print PDF

தினகரன்             27.11.2013

பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

கோவை, : கோவை மாவட்டத்தில் 37 பேரூராட்சிகள் உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அனைத்து பேரூராட்சிகளிலும் 40 மைக்ரான் தடிமன் அளவிற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர், தட்டு போன்றவற்றை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் தடை விதித்தது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணி, பேப்பர், சணல் பைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அனை த்து பேரூராட்சிகளிலும் வியாபார கடைக ளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 7 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில் ஒரு காகிதப்பை 2 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக பிளாஸ்டிக் பயன்பாடு வழக்கம் போல் அதிகரித்து விட்டது. கேரி பேக் பயன் பாடு அதிகமானதால், பேரூரட்சி பகுதிகளில் சுகாதார கேடு அதிகமாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை தொ டர்ந்து பிளாஸ்டிக் பொரு ட்கள் பயன்பாட்டை முற்றி லும் தடுக்கவேண்டும், அலட்சியம் காட்டக்கூடாது என பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் பேரூராட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


Page 294 of 3988