Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி அறுவை மனையில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை

Print PDF

தினகரன்             27.11.2013

மாநகராட்சி அறுவை மனையில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை

கோவை, : கோவை மாநகராட்சி வதை கூடத்தில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் தேவாங்கபேட்டை, உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோடு, உப்பிலிபாளையம் பகுதியில் வண்டி மாடுகள் உள்ளன. காங்கயம் இனத்தை சேர்ந்த இந்த மாடுகள் குப்பை வாகனங்கள் இயக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கோமாரி நோய் வேகமாக பரவி வரும் நிலையில், மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் அசோகன் தலைமையில் நேற்று முன் தினம் 46 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

மாடுகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டது. அசோகன் கூறுகையில், ‘‘சத்தி ரோட்டில் உள்ள மாடு வதை கூடத்தில் தினமும் 30 முதல் 50 மாடுகள் வெட்டப்படுகிறது. வெட்டப்படும் மாடுகளை ஒரு நாளுக்கு முன்பே நோய் உள்ளதா என பரிசோதனை செய்து வருகிறோம். கோமாரி நோய் உள்ளிட்ட நோய்கள் இருந்தால் அந்த மாடுகள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

 

வேலூர் பழைய புறவழிச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி           27.11.2013

வேலூர் பழைய புறவழிச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர் பழைய புறவழிச் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அகற்றினார்கள்.

போக்குவரத்து மாற்றம்

வேலூர் நகரில் பாதாள சாக்கடை பணிக்காக தற்போது நேஷனல் தியேட்டர் முதல் மக்கான் வரை பாதை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூரில் இருந்து காட்பாடி, சத்துவாச்சாரி, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மக்கான், பழைய புறவழிச் சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

பழைய புறவழிச் சாலையில் இருபக்கமும் மோட்டார் வாகன பணிமனைகள் உள்ளன. இதனால் சாலையிலேயே லாரி, வேன் போன்ற வாகனங்களை நிறுத்தி பழுதுபார்த்து வருகின்றனர். இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த நிலையில் கலெக்டர் நந்தகோபால் உத்தரவின்படி மாநகராட்சி பொறியாளர் பாஸ்கரன் தலைமையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கண்ணன், நகர்நல அலுவலர் வசந்த்திவாகர், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் புறவழிச் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

இந்த சாலையில் தேங்கி கிடந்த தண்ணீரை பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டி சரிசெய்தனர். மேலும் டயர், குப்பைகள், தேவையில்லாத பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் பாஸ்கரன் கூறியதாவது:–

சாலையிலேயே வாகனங்கள்

தற்போது பாதாள சாக்கடை பணிக்காக காட்பாடி சாலை மூடப்பட்டுள்ளது. பழைய புறவழிச் சாலையில் 80 அடி அகலமான சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. விரைவில் இந்த சாலையில் நடுவில் தடுப்புகள் (டிவைடர்) வைக்கப்படும். மேலும் இங்கு பழைய டயர்கள், மழை காரணமாக மழைநீர் ஆகியவை தேங்கி உள்ளன. அவை சீரமைக்கப்பட்டு டயர்கள் அகற்றப்படுகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அபராதம்

இந்த சாலையில் தற்போது மீண்டும் வாகனங்கள் நிறுத்தினால் உடனடி அபராதம் (ஸ்பாட் பைன்) வசூலிக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

ஈரோடு மாநகராட்சியில் ரூ.4 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி

Print PDF

தினத்தந்தி           27.11.2013

ஈரோடு மாநகராட்சியில் ரூ.4 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி

ஈரோடு மாநகராட்சி 3–வது மண்டலத்துக்கு உள்பட்ட 44–வது வார்டு பெரியார் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.4 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணி நேற்று நடந்தது. முன்னதாக நடந்த பூமி பூஜைக்கு மண்டல தலைவர் ரா.மனோகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் செந்தாமரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 295 of 3988