Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கக் கூடாது புதிய கமிஷனர் கிரண்குராலா கண்டிப்பு

Print PDF

தினத்தந்தி           26.11.2013

மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கக் கூடாது புதிய கமிஷனர் கிரண்குராலா கண்டிப்பு

மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கக் கூடாது என்று புதிய கமிஷனர் கிரண்குராலா கண்டிப்புடன் கூறினார்.

வரித்தொகை

மதுரை மாநகராட்டியின் புதிய கமிஷனராக கிரண்குராலா பொறுபேற்றுள்ளார். அவர் நேற்று மண்டலம்–4 அலுவலகத்தில் ஆய்வு பணி மேற்கொண்டார். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு பணி மதியம் 2.30 மணி வரை நடந்தது. ஆய்வின் போது அவர் தகவல் மையம், வருவாய் பிரிவு, பொறியியல் பிரிவு, கம்ப்யூட்டர் பிரிவு போன்றவற்றை பார்வையிட்டார்.

மேலும் வரி வசூலில் தற்போதைய நிலை மற்றும் வசூலிக்க வேண்டிய நிலுவை தொகை குறித்து கேட்டறிந்தார். மண்டல அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டு உடனடியாக தீர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதே போல் அலுவலகத்திற்கு வரும் தபால்கள் மற்றும் கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கமிஷனரின் இந்த ஆய்வின் போது மண்டல உதவி கமிஷனர் தேவதாஸ் உடன் இருந்தார்.

ஆய்வு கூட்டம்

இந்த ஆய்விற்கு பின்னர், மாநகராட்சி அண்ணாமாளிகையில் துப்புரவு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கமிஷனர் கிரண்குராலா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மதுரை மாநகராட்யின் முக்கிய பணி துப்பரவு பணியாகும். எனவே அனைத்து சுகாதார ஆய்வாளர்களும் வார்டு வாரியாக துப்பரவு பணியாளர்கள் வருகை, குப்பை வாகனங்கள், குப்பை தொட்டிகள் எண்ணிக்கை, குப்பை அகற்றுதல், ஆகிய விவரக்ன்களை அந்தந்த மண்டல ஆய்வாளருக்கு தினந்தோறும் அறிக்கையாக கொடுக்க வேண்டும். பின்னர் அந்த அறிக்கையை எனக்கு தெரிவிக்க வேண்டும்.

கண்டிப்பு

மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீ மற்றும் சாலையோர கடைகள் குப்பைகள் மற்றும் டீ கப்புகளை குப்பை தொட்டி தவிர கண்ட இடங்களில் போட கூடாது என முதலில் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஆற்றுக்கரையில் தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கமிஷனர் கிரண்குராலா, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை தேங்கி நிற்கிறது என்ற புகார் இருக்கக் கூடாது. இதனை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார். கூட்டத்தில் துணை கமிஷனர் லீலா, நகர் பொறியாளர் மதுரம், நகர் நல அலுவலர் யசோதாமணி உள்பட அதிகாரிகளும், துப்புரவு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோம்

Print PDF

தினகரன்              25.11.2013

கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோம்

சோமனூர்,:கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோமாரி நோய் தடுக்க பேரூராட்சி நிர்வ £கம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிவருகிறது.

கோமாரி நோய் தாக்கத்தின் அறிகுறிகள் பற்றியும், அவற்றை பராமரித்து தடுக்கும் முறைகள் பற்றியும் செயல் விளக்கத்துடன் கூடிய இந்த நோட்டீசை விநியோகித்தனர்.

பேரூராட்சி தலைவர் மகாலிங்கம் தலைமையில் செயல்அலுவலர் ஜெகதீசன் முன்னிலையில் பணியாளர்கள், கால்நடைகள் உள்ள ஒவ்வொ ரு வீட்டுக்கும் சென்று மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

இதுகுறித்து துண்டு பிரசுரம் மூலமாகவும், ஆட்டோ விளம்பரம் மூலமாகவும், மற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று கால்நடைவளர்க்கும் மக்களுக்கு கோமாரிநோய்பரவுவது பற்றியும் அவற்றை தடுப்பது பற்றியும் தெரியப்படுத்திவருகின்றனர்.

இந்த நோய் வேகமாகப்பரவிவருவதால், கால்நடைகளையே நம்பிவாழும் விவசாயிகள் கவனம் எடுத்து கால்நடைகளுக்கு நோய்தாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டுமென்றும், மாடுகளின் வயிற்றிலும், வாயிலும் புண் ஏற்படாமல் பார்த்துக்கொல்லும் படியும், கால்நடை மருத்துவரிடம் கால்நடைகளை காண்பித்து ஆலோசனை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

 

30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட் மீண்டும் ஏலம்

Print PDF

தினகரன்              25.11.2013

30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட் மீண்டும் ஏலம்

மதுரை, : சந்தை கண்காணிப்பாளர்கள் 4 பேர் மாற்றத்தை தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பில் இருந்த 30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட்கள், நவீன கழிப்பிடங்களை டிச.5ல் மீண்டும் ஏலம்விட புதிய ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி பொறுப்பிலுள்ள மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட், நவீன கழிப்பிடங்களுக்கு 2012 மார்ச்சில் ஏலம் விடப்பட்டது. இதில் விரும்பிய அனைவரும் ஏலம் கேட்க அனுமதிக்கப்படவில்லை. யாருக்கு ஏலம் என முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூடுதல் தொகைக்கு ஏலம் போகவில்லை. நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் கேட்க வந்த சிலருக்கும் உரிமம் கிடைக்கவில்லை.

இப்படி பல்வேறு குளறுபடிகளால் 30 இனங்களுக்கு யாருக்கும் உரிமம் வழங்க முடியாத நிலையில், மாநகராட்சியே நேரடியாக ஊழியர்கள் மூலம் வசூ லிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அந்தந்த மண்டலங்களில் பணியாற்றி வந்த சந்தை கண்காணிப்பாளர்களின் பொறுப்பில் இப்பணி ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இதில் குறைந்த தொகையே வசூலானதாக மாநகராட்சிக்கு கணக்கு காட்டி முறைகேடு நடைபெற்றது.

புதிய ஆணையராக கிரண்குராலா பொறுப்பேற்றதும், முதல் நடவடிக்கையாக 4 மண்டலங்களி லும் சந்தை கண்காணிப்பாளர்களை மாற்றி, பொறுப்புகளை மண்டல உதவி வருவாய் அலுவலர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இருந்தபோதும் அவர்கள் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை. இதனால் அந்த பணிகளை உதவி வருவாய் அலுவலர்கள் கையில் எடுத்துக் கொள்ளும்படி ஆணையர் கூறிவிட்டார். இதன்படி உதவி வருவாய் அலுவலர்கள் பணிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர்கள் கவனித்து வந்த 30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட், நவீன கழிப்பிடங்களை மீண்டும் டிசம்பர் 5ல் ஏலம் விட ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதில் புதூர் மார்க்கெட், பெரியார் பஸ் ஸ்டாண்ட் டூவீலர் ஸ்டாண்ட்,  வெள்ளைக் கண் தியேட்டர் அருகிலுள்ள மார்க்கெட், செல்லூர் அகிம்சாபுரம் மார்க்கெட், ஜம்புரோபுரம், ஜெய்கிந்துபுரம் மார்க்கெட், திருப்பரங்குன்றம் கோவில் அருகிலுள்ள டூவீலர் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலக வளாகம் மற்றும் ஈகோ பார்க் ஸ்டாண்ட், படகுதுறை உளளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த ஏலங்களை முறையாக நடத்த ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அனுமதி இல்லா கடைகளுக்கு பெட்டி தயாரிப்பு

மாநகராட்சி சார்பில் புதிதாக கடைகள் வைக்க அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு, இட மாற்றம் என்ற பெயரில் முக்கிய இடங்களில் கடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் சுமார் 200 பெட்டி கடைகள் எந்தவித அனுமதியுமின்றி பெருகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது, இவை அனைத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்ற ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் அனுமதி பெறாத பல்வேறு கடைகளுக்கு பெட்டிகள் தயாராகி வருகின்றன.

 


Page 298 of 3988