Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நீலம்பூர் அருகே ரூ.32 லட்சத்தில் தார்ச் சாலைப் பணி துவக்கம்

Print PDF

தினமணி        22.11.2013

நீலம்பூர் அருகே ரூ.32 லட்சத்தில் தார்ச் சாலைப் பணி துவக்கம்

நீலம்பூர் அருகே, ரூ.32 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது .

நீலம்பூர் அருகே, அவிநாசி சாலையிலிருந்து அம்பேத்கர் நகருக்கு செல்லும் தார்ச்சாலை நீண்ட காலமாக மிகவும் பழுதடைந்திருந்தது. அதைச் சீரமைக்கக்கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சூலூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, அப்பகுதியில் 1.1 கி.மீ. நீளத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்க ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.தினகரன், மயிலம்பட்டி ஊராட்சித் தலைவர் ராதாமணி செல்வராஜ், வடக்கு மாவட்ட தே.மு.தி.க. முன்னாள் பொருளாளர் செந்தில், மாதப்பூர் ஊராட்சித் தலைவர் ஹரிகிருஷ்ணன், கண்ணம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் ஆறுசாமி, கவிப்பிரியா விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு: பெண்ணுக்கு அரை கிராம் தங்கம் பரிசு

Print PDF

தினமணி        22.11.2013

பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு: பெண்ணுக்கு அரை கிராம் தங்கம் பரிசு

பிளாஸ்டிக் குப்பை சேகரிப்புக்காக திருவொற்றியூரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கு அரை கிராம் தங்க நாணயத்தை சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் மண்டலக் குழுத் தலைவர் மு.தனரமேஷ் புதன்கிழமை வழங்கினார்.

மக்காத குப்பையைத் தனியாகப் பிரித்தெடுப்பதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படும்போது டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்தவுடன் குலுக்கல் போட்டிகளை நடத்தி முதலில் தேர்வு செய்யப்படும் அதிஷ்டசாலிக்கு அரை கிராம் தங்க நாணயமும் அடுத்து தேர்வாகும் ஐந்து நபர்களுக்கு கடிகாரமும் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து திருவொற்றியூர் மண்டலத்தில் இவ்வாறு பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து வழங்கும் பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த மண்டலத்தில் 500 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டதையடுத்து குலுக்கல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் டி.எஸ்.கோபால் நகரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் தேர்வானார்.

இவருக்கு அரை கிராம் தங்க நாணையத்தை மண்டலக் குழுத் தலைவர் மு.தனரமேஷ் வழங்கினார். மேலும் ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடிகாரங்களையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் காங்கேயம் கென்னடி, மாமன்ற உறுப்பினர்கள் அமல்ராஜ், சூர்யபாபு, நாகம்மாள், ஜெபராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி        22.11.2013

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை ரிப்பன் கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ரிப்பன் கட்டடத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல முக்கிய பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த மாதத்துக்கான மன்றக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடைபெறவுள்ளது.

இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 


Page 301 of 3988