Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னை நகரில் 201 அம்மா உணவகங்களை கண்காணிக்க நவீன கேமரா: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

மாலை மலர்         22.11.2013

சென்னை நகரில் 201 அம்மா உணவகங்களை கண்காணிக்க நவீன கேமரா: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
 
சென்னை நகரில் 201 அம்மா உணவகங்களை கண்காணிக்க நவீன கேமரா: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, நவ. 22 - சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது.

துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு:–

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-வது மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ– மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தர வரிசையில் இடம் பெற்றால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங், கலை– அறிவியல் பட்டப்படிப்புகள், சட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கிறது.

தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு இனி ரூ.45 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். சட்டக்கல்லூரி, நர்சிங் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். எம்.எஸ்.சி. உள்ளிட்ட 5 ஆண்டு படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சி பள்ளி, சிறப்பு வகுப்புகளில் படிக்கும் 10–வது மற்றும் பிளஸ் 2 மாணவ– மாணவிகளுக்கு சுண்டல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பகுதி பள்ளி மாணவ– மாணவிகளுக்கும் சுண்டல் வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சி பகுதியில் 201 அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றின் செயல்பாட்டை கண்காணிக்க மொத்தம் 600 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

ரூ.1 கோடியே 33 லட்சம் செலவில் இவை அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் மாநகராட்சியில் இருந்தவாரே உணவகத்தை கண்காணிக்க முடியும்.

சென்னை மாநகராட்சி பகுதியில் விளம்பர பலகைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர பலகைகளை கண்காணிக்க போதிய ஊழியர்கள் இல்லை.

எனவே விளம்பர பலகை வைக்கவும், அதை கண்காணிக்கவும் கூடிய அதிகாரம் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வழங்கும் வகையில், உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்படுகிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 195 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் வசதிக்காக காங்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கியுள்ள முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.

இசை மற்றும் கலைக்கு பொதுவான பாடத்திட்டம், இசை கல்லூரிகளுக்கு 13 துறைகள் ஏற்படுத்தி பல்கலை கழகம் அமைத்துள்ள முதல்– அமைச்சருக்கு வாழ்த்து.

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழை– எளிய மக்களுக்கு கொசுவலை, நொச்சி செடி, பப்பாளி மரக்கன்றுகள் வழங்கி ஏழை மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கான போட்டி தேர்வு பயிற்சி யையும் தொடங்கி வைத்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. ஆகிய சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களை நிரப்ப பட்டியல் தயாரிப்பு 26–ந்தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி         22.11.2013

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களை நிரப்ப பட்டியல் தயாரிப்பு 26–ந்தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்

தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களை நிரப்ப பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதால் வருகிற 26–ந்தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் தமிழ் செல்வி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இளநிலை உதவியாளர் பணியிடம்

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்கான மாநில அளவில் அறிவிக்கப்பட்ட இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களுக்கு மாநில அளவிலான பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. இப்பணிகாலியிடத்திற்கான கல்வி தகுதி பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் கம்ப்யூட்டர் ஆட்டோமேஷன் அரசு சான்று முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். 1–7–2013– நாளில் ஓ.சி பிரிவினர் 30 வயதும், பி.சி/எம்.பி.சி/ பி.சி முஸ்லிம் பிரிவினர் 32 வயதும் எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ பிரிவினர் 35 வயதும் மிகாமல் இருக்கவேண்டும்.

இணைய தளத்தில் சரிபார்ப்பு

எனவே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருச்சியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ அல்லது அரசு ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றினை பட்டப்படிப்புடன் எஸ்.சி/பி.சி பொதுப்பிரிவினர் 18–7–2002 தேதி வரையும், எம்.பி.சி பிரிவினர் 8–10–2002 தேதி வரையும், பி.சி முஸ்லிம் 31–7–2003 வரையும், எஸ்.சி.ஏ பிரிவினர் 23–9–2003 தேதி வரையும், எஸ்.டி பிரிவினர் 25–11–2005 தேதி வரையும் பதிவு செய்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பதிவுதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது பதிவை சரிபார்த்து இணைய தளத்தில் அடையாள அட்டை பிரதி எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

26–ந்தேதிக்குள்...

பின்னர் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை (இணையதளம்) பிரிண்ட் அவுட், அனைத்து அசல் கல்வி சான்றுகள், இவ்வலுவலகத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் ஜெராக்ஸ் பிரதிகளுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 26–11–2013க்குள் வருகை தந்து பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்று உள்ளதை தவறாமல் சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்படும்: மாநகராட்சி உறுதி

Print PDF

தினமலர்          22.11.2013

திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்படும்: மாநகராட்சி உறுதி

திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு பகுதிக்கு பல மாவட்டங்களில் இருந்து வெளிமாநில மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அதனால் இந்த பகுதியை சுகாதாரமாக பராமரிக்கவும், தேவையான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இங்கு ரூ.13.50 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டப்பட உள்ளது. மேலும் 11 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கழிப்பிட இடத்தையும், கட்டுமான பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெயா, கமிஷனர் தண்டபாணி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறியதாவது: கண்காணிப்பு கோபுர கட்டடத்தில் கலை அம்சம் கொண்ட ஓவியங்கள் வடிவமைக்கவும், சுய உதவி குழு மூலம் திருச்சியில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த தகவல் மையமும் அமைக்கப்படவுள்ளது. பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே ஆண்களுக்கு இரு இலவசம், மூன்று கட்டண கழிப்பிடமும், பெண்களுக்கு ஒரு இலவசம், மூன்று கட்டண கழிப்பிடமும் உள்ளது. கழிப்பிடங்கள் மைக்ரோ ஆர்கனிஸம் எனும் தண்ணீர் கலந்த மருந்து தெளிக்கப்பட்டு துர்நாற்றம் இல்லாத வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்டில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மாநகராட்சியின் அனைத்து பகுதியிலும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க, முக்கிய இடங்களில் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 302 of 3988