Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி ரத்தினபுரி பள்ளி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

Print PDF

தினகரன்            22.11.2013

மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி ரத்தினபுரி பள்ளி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

கோவை, :  மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில், ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள், கோவை நேரு மைதானத்தில் நேற்று துவங்கியது.

இதில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 41 மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 531 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் என, வயது வாரியாக மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 100 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ரிலே உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.

நேற்று நடந்த தடகள போட்டிகளில் வீரர்களுக்கான, 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளில் நடந்த போட்டிகளில், கோவை ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்று, மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தது.

வீராங்கனைகளுக்கான தடகள போட்டிகளில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி பிரிவில் கோவில்மேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியும், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி பிரிவில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பிடித்தது.

அதே போல், மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையில் டோரல்மென்ட் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், த்ரோ-பால் போட்டி வீராங்கனைகளுக்கான பிரிவில், 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதலிடத்தை பிடித்தது. வாலிபால் போட்டி வீரர்களுக்கான பிரிவில், 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி முதலிடத்தை பிடித்தது.

கோகோ போட்டி வீரர்களுக்கான பிரிவில், 14 வயதுக்கு உட்பட்டோரில் ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆர்.எஸ்.புரம் பெண்கள் பள்ளியும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியும் முதலிடத்தை பிடித்தது.

கபடி போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவில்மேடு மாநகராட்சி பள்ளியும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வடகோவை மாநகராட்சி பள்ளியும் முதலிடத்தை பிடித்தது. 

தடகளம் மற்றும் டோரல்மென்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. மாநகர மேயர் வேலுசாமி பங்கேற்று, சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்த, ரத்தினபுரி மாநகராட்சி பள்ளிக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் லதா, துணை ஆணையாளர் சிவராசு, மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி பள்ளி அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

மக்களை தேடி சிறப்பு முகாம்

Print PDF

தினகரன்            22.11.2013

மக்களை தேடி சிறப்பு முகாம்

கோவை, : கோவை மாவட்டத்தில் மக்களை தேடி சிறப்பு முகாம் இன்று (22ம் தேதி) நடக்கவுள்ளது.

கோவை வடக்கு தாலுகாவில் பிளிச்சி கிராமத்தில் முகாம் நடத்தப்படும். தெற்கு தாலூகாவில் ஒட்டர்பாளையம், மேட்டுப்பாளையம் தாலூகாவில் மருதூர் கிராமம், அன்னூர் தாலூகாவில் அல்லப்பாளையம், சூலூர் தாலூகாவில் கலங்கல் கிராமம், கிணத்துக்கடவு தாலுகாவில் குருநல்லிபாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி தாலூகாவில் ஜமீன் ஊத்துக்குளியில் முகாம் நடத்தப்படும். உதவி தொகை, பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் பதிவு, பிறப்பு, இறப்பு சான்று, வருமானம், இருப்பிடம், சாதி சான்று, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்தல் போன்றவை தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

அரசு மருத்துவமனை செல்ல ரூ.70லட்சத்தில் நடை மேம்பாலம்

Print PDF

தினகரன்            22.11.2013

அரசு மருத்துவமனை செல்ல ரூ.70லட்சத்தில் நடை மேம்பாலம்

கோவை, : கோவையில் அரசுமருத்துவமனை உள்ளிட்ட இரண்டு இடங்களில் ‘ஸ்கைவாக்‘ மேம்பாலம் அமைக்க மேயர் அடிக்கல் நாட்டினார்.

கோவை மாநகரில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும், சாலையை கடக்க மக்கள் சிரமப்படும் பகுதியிலும் ‘ஸ்கைவாக்‘ என்னும் நடைமேம்பாலம் அமைக்க மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை முன்புறம், சிங்காநல்லூர் காவல்நிலையம் முன்புறம், ரயில்நிலையம் முன்புறம், மேட்டுப்பாளையம் ரோடு அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் முன்புறம், மேட்டுப்பாளையம் ரோடு-சிவானந்தாகாலனி ஆகிய ஐந்து இடங்களில் இந்த நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக, கோவை அரசு மருத்துவமனை முன்புறம், சிங்காநல்லூர் காவல்நிலையம் முன்புறம் ஆகிய இரு இடங்களிலும் இந்த ‘ஸ்கைவாக்‘ மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, தலா ரூ.70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கமிஷனர் லதா தலைமை தாங்கினார். மேயர் செ.ம.வேலுசாமி அடிக்கல் நாட்டினார். இப்பாலம், தரையில் இருந்து 6 மீட்டர் உயரத்திலும், 31 மீட்டர் நீளத்திலும் அமைகிறது. மேலே மக்கள் நடந்து செல்ல ஐந்து அடி அகலம் இடைவெளி விடப்படுகிறது. சாலையின் ஒருபுறம் பாலம் துவங்கும் இடம், மறுபுறம் பாலம் முடிவடையும் இடம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்படுகிறது. மீதமுள்ளவை அனைத்தும் இரும்பு கிரில்களால் அமைக்கப்படுகிறது.

 


Page 304 of 3988