Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு கொசுவலை திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

Print PDF

தினகரன்          21.11.2013  

சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு கொசுவலை திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

சென்னை, : சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களின் கரைகளையொட்டி வாழும் ஏழை மக்கள் கொசு தொல்லையால் அவதிபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு இலவச கொசுவலை வழங்கும் திட்டத்தை கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 78,184 கொசு வலைகள் ரூ.1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதலை தடுப்பதற்காக பள்ளி குழந்தைகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் வைட்டமின் ஏ சத்து கொண்ட 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டம், கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக 5.5லட்சம் மூலிகை குணம் கொண்ட நொச்சிச் செடி கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பினை பெறும் வகையில் சென்னை மாகநராட்சியால் முதல்கட்டமாக 710 ஏழை பட்டதாரி இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் பயிற்சி மையங்களையும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். 

 

அரும்பார்த்தபுரத்தில் ரூ.43லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி அமைச்சர் பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி           21.11.2013

அரும்பார்த்தபுரத்தில் ரூ.43லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி அமைச்சர் பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி உழவர்கரை தொகுதி வில்லியனூர் கொம்யூன் அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகர் உட்புற வீதிகளில் ரூ.43 லட்சத்து 95 ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், செயற்பொறியாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் உழவர்கரை தொகுதி பிச்சைவீரன்பட்டு பெரம்பை ரோட்டில் இருந்து அரும்பார்த்தபுரம் வரையிலான பிரதான சாலையை மேம்படுத்தும் பணி ரூ. 45 லட்சம் செலவில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி சாலை மேம்படுத்தும் பணியை தொடங் வைத்தார்.

 

வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு முகாம் 25–ந் தேதி தொடங்குகிறது

Print PDF

தினத்தந்தி           21.11.2013

வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு முகாம் 25–ந் தேதி தொடங்குகிறது

தூத்துக்குடியில் வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 25–ந் தேதி தொடங்குகிறது என மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உரிய ஆவணங்களின் அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தோராய வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக தூத்துக்குடி டூவிபுரம் 7–வது தெருவில் உள்ள மாவட்ட மக்கள் நல திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வருகிற 25–ந் தேதி, அலகு 1 மீனாட்சிபுரம் மெயின் ரோடு, முதல் தெரு, மேற்கு தெரு, 4–வது தெரு, 3–வது தெரு, ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம் கிழக்கு தெரு, பாளையங்கோட்டை ரோடு, டூவிபுரம் 1, 2, 3 தெரு, அலகு–2 பொன்னகரம், பார்வதியம்மன் கோவில் தெரு, 4–வது தெரு, 5–வது தெரு.

26–ந் தேதி, அலகு–1 பாளையங்கோட்டை ரோடு மேற்கு, வி.வி.டி.தெரு, மணிநகர் 2–வது தெரு, டூவிபுரம் மெயின் ரோடு, டூவிபுரம் 1–வது தெரு. அலகு–2 திரவியபுரம் 5–வது தெரு.

27–ந் தேதி, அலகு–1 டூவிபுரம் 2, 3–வது தெரு, அலகு–2 முத்துகிருஷ்ணாபுரம் 3, 4, 5, 6 ஆகிய தெருக்கள்.

28–ந் தேதி, அலகு–1 டூவிபுரம் 2, 3–வது தெரு, அலகு–2 முத்துகிருஷ்ணாபுரம் 1, 2 ஆகிய தெருக்கள்.

29–ந் தேதி அலகு–1 டூவிபுரம் 3,4,5 ஆகிய தெருக்கள், வி.வி.டி.ரோடு. அலகு–2 முத்துகிருஷ்ணபுரம் 1, 2 ஆகிய தெருக்கள்.

30–ந் தேதி அலகு–1 டூவிபுரம் 4, 5, 6 ஆகிய தெருக்கள். அலகு–2 முத்துகிருஷ்ணாபுரம்.

திரேஸ்புரம்

1–ந் தேதி அலகு–1 டூவிபுரம் 5, 8, 9, 10, 11 ஆகிய தெருக்கள், ஜெயராஜ் ரோடு. வி.வி.டி.ரோடு, அலகு–2 பூபால்ராயர்புரம்.

2–ந் தேதி டூவிபுரம் 5, 10, 11 ஆகிய தெருக்கள், வி.வி.டி.ரோடு, அலகு–2 திரேஸ்புரம்.

3–ந் தேதி அலகு–1 கே.வி.கே.நகர், போல் பேட்டை, அலகு–2 பூபால்ராயர்புரம்.

4–ந் தேதி அலகு–2 போல் பேட்டை, அலகு–2 பூபால்ராயர்புரம், திரேஸ்புரம்.

ஆவணங்கள்

மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவம்–1–ல் குறிப்பிட்டு பட்டாதாரர் பெயர்களுக்கு முந்தைய கிரைய ஆவணங்கள் (மூலப்பத்திரம்), தொடர் கிரைய ஆவணங்கள், வில்லங்க சான்றுகள், வீட்டு தீர்வை ரசீதுகள், இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தால், உட்பிரிவு இல்லாதவைகளுக்கு 15 நாட்களிலும், உட்பிரிவு உள்ள ஆவணங்களுக்கு அதிகபட்சமாக 45 நாட்களில் பட்டா வழங்கப்படும்.

இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 


Page 308 of 3988