Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிருங்கள்

Print PDF

தினமலர்         20.11.2013 

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிருங்கள்

திருப்பூர் :நவ., 19ம் தேதி, உலக கழிப்பறை தினமாக கருதப்படுகிறது; அந்நாளில், கழிப்பறையை தூய்மையாக பராமரிப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், உலக கழிப்பறை தின விழா நேற்று நடந்தது. பள்ளி வளாகத்தில் இருந்த கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. அதன்பின், கழிப்பறையை தூய்மையாக பராமரிப்பது குறித்து கருத்தரங்கு நடந்தது. மாநகராட்சி நான்காவது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஞானாம்பாள் வரவேற்றார். நகர்நல அலுவலர் செல்வக்குமார் பேசுகையில்,"" திறந்தவெளியில் மலம் கழிப்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

வயிற்றுபோக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுகின்றன. கழிப்பறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். கழிப்பறையை பயன்படுத்திய பின், கை மற்றும் கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை நகம் நறுக்க வேண்டும். ""மாதம் ஒருமுறை முடித்திருத்தம் செய்துகொள்ள வேண்டும். கால்களில், காலணி அணியாமல் வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது,'' என்றார்.ஆசிரியர் கனகராஜா நன்றி கூறினார்.விழிப்புணர்வு ஊர்வலம் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிப்பிடங்கள் நேற்று சுத்தம் செய்யப்பட்டு, பொதுமக்களிடம் உலக கழிப்பிட தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கழிப்பிட பயன்பாடு மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.மூன்றாவது மண்டல அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்தை, இரண்டாவது மண்டல தலைவர் ஜான் துவக்கி வைத்தார். நகர் நல அலுவலர் செல்வக்குமார், மாநகர பொறியாளர் ரவி, உதவி கமிஷனர்கள் கண்ணன், செல்வநாயகம் உட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு தட்டிகளை கையில் ஏந்தியபடி, நல்லூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சென்றனர். மண்டல அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம், காங்கயம் மெயின் ரோட்டில் ராக்கியாபாளையம் பிரிவு வரை சென்றது. அதன்பின், பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

 

வணிக வளாகமான மாநகராட்சி மருத்துவமனை

Print PDF

தினமலர்         20.11.2013 

வணிக வளாகமான மாநகராட்சி மருத்துவமனை

கோவை : புரூக்பாண்ட் ரோட்டிலுள்ள சீத்தாலட்சுமி மகப்பேறு மையத்தில், ரோட்டோரத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 16 கடைகள் கட்டப்படுகின்றன.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :

மாநகராட்சி வணிக வளாகங்களில் 2,700 கடைகள் உள்ளன, இதன்மூலம் கடந்தாண்டு வரையிலும் ரூ. 4.8 கோடி வருவாய் கிடைத்தது. தற்போது புதிதாக வாடகை நிர்ணயம் செய்து, டெண்டர் விடப்பட்டது. இதன் மூலம், ஆண்டுக்கு ரூ. 12.8 கோடி எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 250 கடைகள் புதிதாக கட்டப்படுவதால் கூடுதலாக ரூ. 3 கோடி வருவாய் கிடைக்கும். என, கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சி சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. வருவாய் இருந்தால் தான், சேவை செய்ய முடியும், என்றனர்.

 

உலக கழிப்பறை தினமான நேற்று மாநகராட்சி பராமரிக்கும் கழிப்பறைகளின் சுத்தம் குறித்து ஆய்வு

Print PDF

தினமலர்         20.11.2013

உலக கழிப்பறை தினமான நேற்று மாநகராட்சி பராமரிக்கும் கழிப்பறைகளின் சுத்தம் குறித்து ஆய்வு

மதுரை : உலக கழிப்பறை தினமான நேற்று, மாநகராட்சி பராமரிக்கும் கழிப்பறைகளின் சுத்தம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயர் ராஜன்செல்லப்பா தலைமையிலான அதிகாரிகள்.

உலக கழிப்பறை தினம்' நேற்று; "இதுக்குமா தினம்?' என, கேட்கக்கூடாது. மனிதனின் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை, கழிப்பறை. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 524 கழிப்பறைகளின் சுகாதாரம் குறித்து, மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில், துணை கமிஷனர் லீலா, துணைமேயர் கோபாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் தேவதாஸ், நகர்நல அலுவலர் டாக்டர் யசோதா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அலங்கோலமாய் காட்சியளிக்கும் பல கழிப்பறைகள், மேயரின் வருகைக்காக நேற்று சுத்தம் செய்யப்பட்டிருந்தன.

கழிப்பறையின் வெளியே சுகாதாரக் கேடாக காட்சியளித்த பகுதிகளை, பொடிகளை தூவி "அழகாக்கினர்'. பொது இடங்களில் சிறுநீர் கழித்தவர்களுக்கு ரூ.2,850 அபராதமும் விதித்தனர்! உலக கழிப்பறை தினம் என்பதால், "ஒரு நாள்' நடவடிக்கையாக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 


Page 312 of 3988