Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நவ.25ம்தேதி முதல் டிச.4 வரை விரைவு பட்டா மாறுதல் முகாம்

Print PDF

தினகரன்          20.11.2013

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நவ.25ம்தேதி முதல் டிச.4 வரை விரைவு பட்டா மாறுதல் முகாம்

தூத்துக்குடி, : தூத்துக்குடி மாநகராட்சிப்பகுதியில் நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை விரைவு பட்டா மாறு தல் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகா வாரியாக கடந்த மாதம் முழுவதும் விரைவு பட்டா மாறுதல் முகாம் நடத்தப்பட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பட்டா கிடைக்காமால் உள்ள மனுக்களுக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்போது நகர நிலவரித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து இந்த முகாம்களை நடத்த வேண்டும். மனுக்கள் அளிக்கும் மக்களிடம், தங்களுடைய ஆவணங்களை தொடர் ஆவணங்களாக முறையாக அளிக்க வேண் டும் என அறிவுறுத்த வேண் டும்.  அதிகமான மக்கள் வரும் இடங்களில் விரைவில் மனுக்களைப் பெற்று அவர்களிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட ரசீதுகளை வழங்க வேண்டும்.

வருவாய்த் துறை பணியாளர்கள் முழுமையாக இந்த பட்டா மாறுதல் முகாம்களில் பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வா கம் மூலம் நடைபெ றும் இந்த பணிகளுக்கு அனைத் துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

தொண்டாமுத்தூரில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு வாகன பிரசாரம்

Print PDF

தினகரன்          20.11.2013

தொண்டாமுத்தூரில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு வாகன பிரசாரம்

தொண்டாமுத்தூர், : கோவை அருகே தொண்டாமுத்தூர் பேரூராட்சி சார்பில் தீவிர டெங்கு காய்ச்சல் மற்றும் கோமாரி நோய் தடுப்பு வாகன பிரசாரம் துவங்கியது. பிரசாரத்தை பேரூராட்சி தலைவர் ரவி துவக்கி வைத்தார்.

பிரசார வாகனம் கெம்பனூர், குப்பேபாளையம், வண்டிகாரனூர், வலையபாளையம், காளியண்ணன்புதூர், முத்திபாளையம், மல்லிகை நகர், தொண்டாமுத்தூர் உட்பட 15 வார்டுகளில்  வீதி, வீதியாக  சென்று டெங்கு காய்ச்சல் மற்றும் கோமாரி நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விரிவாக விளக்கி பேசினர்.

பிரசாரத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார், துணைத்தலைவர் சேகர், கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சியில் அறிமுகம் ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி

Print PDF

தினகரன்          20.11.2013

மாநகராட்சியில் அறிமுகம் ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி

கோவை, : கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரியை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி துவக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் தொழில்வரி செலுத்துவோர் 4,299 பேர் உள்ளனர். இவர்கள், கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 82 லட்சம் தொழில் வரி செலுத்தியுள்ளனர். இவர்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று தொழில் வரி செலுத்துவதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி துவக்க விழா மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் லதா தலைமை தாங்கினார். மேயர் செ.ம.வேலுசாமி ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி மற்றும் அபாயகரமான கடைகள் தொழில் உரிமம் தொகை (டி அண்ட் ஓ) செலுத்தும் வசதியை துவக்கிவைத்தார். இதற்காக,   ஷ்ஷ்ஷ்.நீநீனீநீ.ரீஷீஸ்.வீஸீ   என்னும் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை பதிவுசெய்து, தொழில் வரி மற்றும் உரிமம் கட்டணம் செலுத்தலாம். பயனாளர்கள் தங்களது முந்தைய ஆண்டின் செலுத்தாத நிலுவை தொகையையும் இதன்மூலம் செலுத்த முடியும்.

நிகழ்ச்சியில், துணை கமிஷனர் சிவராசு, மண்டல தலைவர் ராஜ்குமார், உதவி ஆணையாளர்கள் அமுல்ராஜ், சுந்தரராஜ், செந்தில்குமார், பிரபாகரன், நகர் நல அலுவலர் அருணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 313 of 3988