Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பன்னிமடை நஞ்சுண்டாபுரம்; ரூ.2¼ கோடி செலவில் தார்ச்சாலைகள் அமைத்தல்

Print PDF

தினத்தந்தி           20.11.2013 

பன்னிமடை நஞ்சுண்டாபுரம்; ரூ.2¼ கோடி செலவில் தார்ச்சாலைகள் அமைத்தல்

கோவை அருகே பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 18 லட்சம் செலவில் தார் சாலைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் நடைபெற்றது. வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., பூமி பூஜைக்கு தலைமை தாங்கி, தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஊராட்சி தலைவர்கள் சரவணக்குமார்(பன்னிமடை), வி.கே.வி.சுந்தரராஜ்(நஞ்சுண்டாபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் விஜயன் வரவேற்று பேசினார். பன்னிமடை ஊராட்சி பகுதிகளில் இருந்து ராமநாதபுரம் வரை ரூ.1 கோடியே 73 லட்சத்திலும், நஞ்சுண்டாபுரம் பகுதியிகளில் தடாகம் சாலையில் இருந்து ஊராட்சி அலுவலகம் வரை ரூ.45 லட்சம் செலவிலும் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதிமணி பாலகிருஷ்ணன், குணசேகரன், டியூகாஸ் துணைதலைவர் செல்வராஜன், கவுன்சிலர்கள் செல்வராஜ், மகேஸ்வரன், சுமதி ஆனந்தன், சோமசுந்தரம், நாகராஜ், மருதையன், மற்றும் சின்னத்தம்மகவுடர், ஜெயபால், கூட்டுறவு சங்க துணை தலைவர் துரைசாமி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இலவச கொசுவலைகள் வழங்கும் திட்டம் : முதல்வர் துவக்கம்

Print PDF

தினமணி          20.11.2013

இலவச கொசுவலைகள் வழங்கும் திட்டம் : முதல்வர் துவக்கம்

ஏழை எளிய  மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு கொசுவலைகளை இன்று வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களின் கரைகளையொட்டிய சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொசுத்தொல்லையினைத்  தவிர்க்கவும், கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஐந்து லட்சம் எண்ணிக்கையிலான விலையில்லாக் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தின்  முதற்கட்டமாக 1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 ரூபாய் செலவில் 78,184 கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

 

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் : முதல்வர் துவக்கினார்

Print PDF

தினமணி          20.11.2013

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் : முதல்வர் துவக்கினார்

சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மா உணவகத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலமாக, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி, பொங்கலுடன் சாம்பாரும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் சென்னை, அரசு பொது மருத்துவமனையிலும் ஒரு அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கோரியிருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையிலும், அதிக அளவில் ஏழை, எளிய மக்கள் வந்து செல்லும் மருத்துவமனை என்பதைக் கருத்தில் கொண்டும், சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 5100 சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் சாப்பிடும் வகையிலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வு தளம் அமைத்தும், அவர்கள் சிரமமின்றி அமர்ந்து சாப்பிடும் வகையில் தாழ்வான மேஜை உள்ளிட்ட வசதிகளுடன் அம்மா உணவகம் அமைத்திட முதல்வர் உத்திரவிட்டார். அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அம்மா உணவகத்தை முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

 


Page 317 of 3988