Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குன்னூரில் கூடுதல் குடிநீர் திட்ட பணிகள் 30 வார்டுகளில் ஏப்ரலில் செயல்படுத்த திட்டம்

Print PDF

தினமலர்          19.11.2013

குன்னூரில் கூடுதல் குடிநீர் திட்ட பணிகள் 30 வார்டுகளில் ஏப்ரலில் செயல்படுத்த திட்டம்

குன்னூர்:குன்னூரில், கூடுதல் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணி துரித கதியில் நடந்து வருகிறது.

தண்ணீர் பஞ்சத்தில், தாளம் போடும் குன்னூர் நகர மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், குன்னூரில் கூடுதல் குடிநீர் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் செயற் பொறியாளர் பாலகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

ஏப்ரலில் செயல்படும்

குன்னூரின் பிரதான நீராதாரமான ரேலியா அணையில் இருந்து கூடுதலாக குடிநீர் இணைப்பு பெற்று, 9.50 கி.மீட்டர் தொலைவில் உள்ள, கிரேஸ்ஹில் நீர் தேக்க தொட்டியில் நிரப்பப்படும்.

அங்கு, 3 நீர்தேக்க தொட்டிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நீர், அட்டடி, வண்டிச்சோலை, புரூக்லேண்ட், கரடிப்பள்ளம், மோர்ஸ்கார்டன் பகுதிகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகளில் நிரப்பப்பட்டு, அங்கிருந்து நகர மக்களுக்கு நீர் வினியோகம் செய்யப்படும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரில் உள்ள 30 வார்டு மக்களும் பயன் பெற முடியும்.

"ரேலியா அணையில் இருந்து கிரேஸ்ஹில் நீர் தேக்க தொட்டிக்கு, குழாய் பொருத்தப்பட்டு, நீர் கொண்டு வரப்பட்டு விட்டது; சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முடியும் தருவாயை எட்டியுள்ளது.

அடுத்தாண்டு, மார்ச் மாதத்துக்குள் பணிகள் நிறைவு பெற்று, ஏப்ரல் மாதம் முதல், நகர மக்களுக்கு நீர் வினியோகம் துவங்கும்' என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரேலியா அணையே ஆதாரம்

இத்திட்டம் வெற்றி பெற, ரேலியா அணையின் நீர் இருப்பு, திருப்திகரமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களை போன்று, ரேலியா அணை வறட்சியால் தரை தட்டினால், இத்திட்டத்தின் கீழ் நீரை பெறுவது கடினம். எனவே, ரேலியா அணையை தூர்வாரி, அணையின் கொள்ளளவை அதிகப்படுத்தி, நீர் இருப்பை நிலையாக வைக்க வேண்டிய அவசியம் நகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

 

சூரிய மின்மயமாகிறது நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம்

Print PDF

தினமலர்          19.11.2013

சூரிய மின்மயமாகிறது நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம்

சென்னை, நகராட்சி ஆணையர் அலுவலகத்தில், 1 கோடி ரூபாய் செலவில், சூரிய மின் உற்பத்தி நிலையம், அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில், நிலவும் மின் பற்றாக்குறையை, சமாளிக்க, சூரிய மின் உற்பத்தி கொள்கையை, தமிழக அரசு, அறிவித்து உள்ளது. இதன்படி, தனியார் வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில், சூரிய மின் உற்பத்தியை, அதிகரிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. தனியார், சூரிய மின் உற்பத்தியை, மேற்கொள்ள, அரசு மானியம் அளிக்கிறது. அரசு அலுவலகங்களில், அரசே, சூரியமின், உற்பத்தி நிலையங்களை அமைக்கிறது.

எழிலகத்தில்...

கவர்னர் மாளிகை, முதல்வர் அலுவலகம் ஆகியவற்றில், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், அமைக்க நடவடிக்கை, எடுக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில், சூரியமின் உற்பத்தி நிலையம், அமைக்கப்படுகிறது. சென்னை, எழிலகத்தில் உள்ள, நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், 50 கிலோவாட், மின் திறன் கொண்ட, சூரியமின் உற்பத்தி நிலையம், அமைக்க, ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அத்துறையின், மூத்த அதிகாரி ஒருவர்,கூறியதாவது:

தமிழக அரசின், சூரிய மின் உற்பத்தி, கொள்கையின் அடிப்படையில், நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், சூரிய மின் உற்பத்தி நிலையம், அமைக்கப்படுகிறது. ஆறு மாடிகள் கொண்ட, இந்த கட்டடத்தின் மேற்பரப்பில், 50 கிலோ வாட், திறன் கொண்ட, சூரியமின் உற்பத்தி நிலையம், அமைக்கப்பட உள்ளது.

பெரும்பகுதி கிடைக்கும்

தமிழ்நாடு, எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மத்திய அரசின் புதுப்பிக்க தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகியவற்றால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, இதன் கட்டுமான பணி ஒப்படைக்கப்படும்.

சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து, ஐந்தாண்டுகளுக்கு பராமரித்து தர வேண்டும் என்ற, ஒப்பந்தத்தில், பணி வழங்கப்படுகிறது.

சூரிய மின் உற்பத்தி நிலையம், அமைப்பதன் மூலம், நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்துக்கு, தேவைப்படும், மின்சாரத்தில் பெரும் பகுதி பூர்த்தியாகும். இந்த திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 

மடிப்பாக்கத்தில் விதிமீறல் கட்டடத்துக்கு 'சீல்'

Print PDF

தினமலர்          19.11.2013

மடிப்பாக்கத்தில் விதிமீறல் கட்டடத்துக்கு 'சீல்'

சென்னை:மடிப்பாக்கத்தில், விதிமீறி கட்டிய இரண்டு மாடி கட்டடத்துக்கு, சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ.,) அதிகாரிகள், நேற்று 'சீல்' வைத்தனர்.

இதுதொடர்பாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், வெங்கடேசன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
சென்னை, மடிப்பாக்கம், பஜார் சாலையில், 922, 923 எண்களுக்கு உட்பட்ட மனையில், தையல் பிரிவு பயன்பாட்டுக்காக, இரண்டு மாடிகள் கொண்ட கட்டடம் கட்ட, அதன் உரிமையாளர், 2011ம் ஆண்டு, அனுமதி வாங்கினார்.

ஆனால், இந்த அனுமதிக்கு மாறாக, முழுவதும், வணிக பயன்பாட்டுக்கான கட்டடம், கட்டி உள்ளார். மேலும், அந்த கட்டடத்தின் ஒரு பகுதியில், மூன்றாவது தளமும், கட்டி வருவது, தெரிய வந்துள்ளது. விதிகளுக்கு புறம்பான, இந்த கட்டுமான பணிகளை நிறுத்த, நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதன் பின்பும், பணிகள் நடந்ததால், இந்த வளாகம் முழுவதையும், அமலாக்க பிரிவு அதிகாரிகள், நேற்று, 'சீல்' வைத்து உள்ளனர். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 319 of 3988