தினமணி 31.07.2012
“தில்லி குடிசை இல்லாத நகரமாகும்’
புது தில்லி, ஜூலை 30: தில்லியைக் குடிசைகளே இல்லாத நகரமாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார். சுல்தான்புரியில் சமுதாயக் கூடத்துக்கான அடிக்கல்லை நாட்டி, பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். அவர், மேலும் பேசியதாவது:
தில்லியில் உள்ள 45 மறுகுடியேற்றக் காலனிகளில் உள்ள வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு உரிமையாளர் அந்தஸ்து வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான நிபந்தனைகளையும், விதிகளையும் அரசு இறுதி செய்துள்ளது.
ஜே.ஜே. காலனிகளில் வசிப்போருக்கு இடமாற்றம் அளிக்க அரசு உத்தேசித்து வருகிறது என்று ஷீலா தீட்சித் கூறினார்.