தினமலர் 16.08.2012
இன்று முதல் இருநாட்கள்கே.கே.நகரில் குடிநீர் “கட்’
திருச்சி: “திருச்சி கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் இருக்காது’ என்று திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் அடங்கும், புங்கனூர் அருகே அரியாற்றில் பாலம் கட்டும் பணி நடப்பதால், பாலத்தின் குறுக்கே செல்லும் குடிநீர் உந்துக்குழாய்களை சாலையின் ஓரத்தில் மாற்றியமைக்கும் பணி தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் இன்று (16ம் தேதி), நாளை (17ம் தேதி) மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படும், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், எல்.ஐ.சி., காலனி, ஐயப்ப நகர், தங்கையா நகர், பழனி நகர், அய்யர் தோட்டம், உடையான்பட்டி, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், அசோக் நகர், விஸ்வாஸ் நகர், ஆனந்த் நகர், சுப்ரமணிய நகர், ஆசாத் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் இன்று, நாளை குடிநீர் விநியோகம் இருக்காது.வரும் 18ம் தேதி முதல் வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
எனவே பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து, மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும்.குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.