தினமலர் 20.08.2012
குச்சனூரில் “பாலித்தீன்’ஒழிப்பு நடவடிக்கை
சின்னமனூர்:குச்சனூரில் பாலித்தீன் பயன்பாட்டை ஒழிக்க, தீவிர நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. குச்சனூர் பேரூராட்சியில், தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் பயன்படுத்துவதை பேரூராட்சி அலுவலர்கள் கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர். மகளிர் சுயஉதவி குழுக்களின் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக, ஊர் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் ஊர் முழுவதும் நடத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி தாமரை கூறியதாவது: நடவடிக்கை எடுத்துவந்தாலும், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. மகளிர் சுயஉதவிக் குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், மாணவ மாணவிகள், பேரூராட்சி பணியாளர்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது,என்றார்.