தின மணி 18.02.2013
“திருவாரூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு விரைவில் அடிக்கல்”
திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றார் நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன்.
திருவாரூர் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் வே. ரவிச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
வரதராஜன்: நகராட்சி அலுவலகத்தில் எந்த பணிக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். எந்த முறையில் அவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்?.
அன்வர் உசேன்: 25-வது வார்டிலுள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
ஜாகீர் உசேன்: இடிந்து விழுந்துள்ள கமலாலயக் குளக்கரையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
துணைத் தலைவர் செந்தில்: துப்புரவுப் பணியாளர்கள் சரியாக வேலை செய்வதில்லை. துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையெனில் அதை சரி செய்ய வேண்டும்.
தலைவர் ரவிச்சந்திரன்: நகராட்சிப் பணியாளர்கள் தேர்வு குறித்த முறையான அறிவிப்பு, விளம்பரம் செய்யப்பட்டு நியமனம் நடைபெறும். 25-வது வார்டிலுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையினரின் கீழ் வருகின்றன. சாலையை சீரமைப்பது குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்படும்.
விளமல் கல்பாலம் அருகில் ரூ. 6 கோடியில் புதியப் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசாணை பிறக் கப்பட்டது.
கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் புதியப் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்படும். நகரில் தெருவிளக்குகள், சாலைகள் பழுது பார்க்கப்படும் என்றார் அவர்.