தின மணி 26.02.2013
“வரிபாக்கி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை
வேட்டவலம் பேரூராட்சிக்கு செலுத்தவேண்டிய வரிபாக்கியை உடனே செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் எச்சரித்துள்ளார்.
வேட்டவலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், 2012 அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர வரியினங்களை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தவறினால் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஏற்படும் செலவுத் தொகை சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.