“அம்மா’ உணவகமானது மலிவு விலை உணவகம்
சென்னை:அரசு அனுமதி கிடைத்து விட்டதால், மாநகராட்சி மலிவு விலை உணவகங்களின் பெயர், “அம்மா உணவகம்’ என, பெயர் மாற்றப்பட்டுள்ளது.ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர் பயன்பெறும் வகையில், சென்னையில், மலிவு விலை உணவகங்களை மாநகராட்சி திறந்துள்ளது. இதுவரை, 73 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.இந்த உணவகங்களுக்கு, “அம்மா உணவகம்’ என, பெயர் வைக்க வேண்டும் என, மாநகராட்சி கடந்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.தமிழக அரசு, அதற்கு அனுமதியளித்து, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இதை தொடர்ந்து, மலிவு விலை உணவகங்களின் பெயர், “அம்மா உணவகம்’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடைகள் முன் இருந்த பெயர் பலகைகள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள், 200 உணவகங்கள் திறக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
தினமலர் 25.03.2013