தினமணி 27.04.2013
“மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் இணைப்பு துண்டிப்பு’
“மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் இணைப்பு துண்டிப்பு’
சிவகாசி நகராட்சிப் பகுதியில், மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்து கூறியுள்ளார்.
இது குறித்த அவரது செய்தி குறிப்பு:
சிவகாசி நகரில் தற்போது 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணை வறண்டு விட்டது. வறட்சியான நேரத்திலும் குடிநீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சிலர், குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில், மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும்.