தினமணி 03.03.2010
“பள்ளி மாணவர்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படவேண்டும்’ : மாநகராட்சி ஆணையர்
ஈரோடு, மார்ச். 2: சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பி.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் சமூக மேம்பாடு மற்றும் அறிவியல் மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி, ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை தொடங்கிவைத்து, மாநகராட்சி ஆணையர் பி.பாலச்சந்திரன் பேசியது: சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும். இதற்கான மாணவர்களின் முயற்சிகளுக்கு கல்வி நிறுவனங்கள் ஊக்கம் அளிக்க வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் ஒவ்வொரு பள்ளிகளிலும் நடைபெற வேண்டும் என்றார்.
கண்காட்சிóயிóல் 15 மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்களின் 75 அறிவியல் மற்றும் சுகாதார மாதிரிகள் இடம்பெற்றிருந்தது. சுகாதாரமான வாழ்க்கை, சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு, இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் குறித்த அறிவியல் மாதிரிகளும் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியல் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல்வர் ஆர்.பாஸ்கரன், பேராசிரியர் சரவணபாபு மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கண்காட்சியினை பார்வையிட்டனர்.