தினமணி 31.05.2013
“நாளை மாலை வரை குடிநீர் விநியோகம் இல்லை
மேல்விஷாரம் தில்லை மகால் திருமண மண்டபம் அருகேயுள்ள பொன்னை தலைமை நீரேற்றும் நிலையத்திலிருந்து குடிநீர் பம்பிங் செய்யும் பிரதான குழாய் பழுது ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு சனிக்கிழமை மாலை வரை குடிநீர் விநியோகம் இருக்காது என வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இக்குழாய் வியாழக்கிழமை மாலை பழுதடைந்தது. பழுது நீக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.