தினமணி 07.06.2013
புழல் சிறை அருகில் “அம்மா’ உணவகம் தொடக்கம்
சென்னை புழல் சிறை அருகில் “அம்மா’ உணவகம் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 200 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பேரில், புழல் மத்திய சிறை எதிரே 22-வது வார்டு அலுவலகம் அருகே “அம்மா’ மலிவு விலை உணவகம் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. புழல் பகுதி மக்களும், சிறைக் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களும் ரூ.5-ல் பொங்கல், ஒரு ரூபாயில் இட்லி ஆகியவற்றை சாப்பிட்டுச் செல்கின்றனர்.