தினமணி 21.06.2013
தினமணி 21.06.2013
“குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் அபராதம்’
செங்கம் நகரில் குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செங்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் சென்னம்மாள் முருகன்
தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார்.
செங்கம் நகர மக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என
பிரித்து அதற்கான தொட்டிகளில் கொட்ட வேண்டும். பொது இடத்தில் குப்பைகளைக்
கொட்டக் கூடாது. உணவகம், இறைச்சிக்கடை, திருமண மண்டபக் கழிவுகளை ஏரி,
குளம், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கொட்டக் கூடாது. மீறி
கொட்டும் கடை உரிமையாளர் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அபராதம்
விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.