தினமணி 27.06.2013
தினமணி 27.06.2013
“ஆத்தூர் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு’
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் நிலவும்
குடிநீர் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நகர்மன்றத்
தலைவர் பி.உமாராணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆத்தூர்
நகராட்சியில் கடந்த சில மாதங்களாக நிலவும் குடிநீர் தட்டுப்பாடு
பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
நரசிங்கபுரம் கூட்டுறவு வங்கி எதிரே உடைந்துள்ள மேட்டூர்- ஆத்தூர்
குடிநீர்க் குழாயை விரைந்து சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகப்படுத்துவதற்காக காந்தி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும்,
நகராட்சிக்குள்பட்ட 33 வார்டுகளிலும் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள்
அமைக்கும் பணியும், முட்டல் ஏரி, அய்யனார் கோயில் ஏரிகளில் ஆழ்துளைக்
கிணறுகள் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
இதற்கிடையே
தாற்காலிக தீர்வாக ஆத்தூர் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் லாரிகள் மூலம்
குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றார் உமாராணி.