தினமலர் 09.07.2013
அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டம் விழுப்புரம் நகராட்சியில் “டெமோ’
விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விளக்கி “டெமோ’ வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பருவமழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட் சிகளில் வீடு கட்ட அனுமதி கோரும் போது, மழைநீர் சேகரிப்பு திட்டம் இருந்தால் மட்டுமே அனுமதியளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நகரம் மற்றும் கிராமங்களில் செயல்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
டெமோ
இதில், விழுப்புரம் நகராட்சி அலு வலகத்தில் மழை நீர் சேகரிப்பின் அவ சியம் குறித்த மழைநீர் சேகரிப்பு தொட்டியின் “டெமோ’ ஏற்பாடு செய்து பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். ஒரு கூடாரத்தில் இரும்பு சீட்டுகள் அமைத்து, அதற்கு மேல் மழைநீர் பெய்வது போன்ற தோற்றத்தில், பைப் லைன் பொருத்தப்பட்டுள்ளது.
அதிலிருந்து, தண்ணீர் கொட்ட விட்டு கூடாரத்திலிருந்து, பி.வி.சி., பைப் மூலம், மணல் கற்கள் கலந்த ஒரு சிறிய குடுவைக்குள் தண்ணீர் ஊற் றப்படுகிறது. அந்த தண்ணீரில் மாசு நீக்கி சின்டெக்ஸ் டேக்கில் பைப் மூலம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் சின்டெக்ஸ் டேங் நிரம்பியவுடன், அதிலிருந்து பூமியில் பொருத்தியுள்ள பைப் மூலம் நிலத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். சின்டெக்ஸ் டேக்கில் தேக்கி வைத்துள்ள தண்ணீரை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.
நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த நகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.