தினமணி 06.03.2010
“சைதாப்பேட்டை, புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனைகளில்’ விரைவில் விளையாட்டுக் கூடம்
சென்னை, மார்ச் 5:சைதாப்பேட்டை, புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனைகளில் விரைவில் குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடங்கள் அமைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை புரசைவாக்கம் மற்றும் பெருமாள்பேட்டை பகுதிகளில் உள்ள 24 மணி நேர மகப்பேறு நலவாழ்வு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடங்களை வியாழக்கிழமை திறந்து வைத்த மேயர் மா. சுப்பிரமணியன் இதை தெரிவித்தார்.
இந்த விளையாட்டுக் கூடத்தில் சிறிய பொம்மைகள், சறுக்கு மரம், அசையும் நாற்காலிகள், உட்காரும் பொம்மைகள், விளையாட்டு கார், திருகு பொம்மைகள் என ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் இடம் பெறும்.