தினமணி 30.04.2013
“கொசுக்களை ஒழிக்க ரூ. 20 கோடியில் திட்டம்’
தினமணி 30.04.2013
“கொசுக்களை ஒழிக்க ரூ. 20 கோடியில் திட்டம்’
தமிழகத்தில் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு ரூ. 20
கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர்
கே.சி.வீரமணி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள் கிழமை நடைபெற்ற சுகாதாரத் துறை மானியக்
கோரிக்கை விவாதத்துக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் அளித்தபோது வெளியிட்ட
அறிவிப்பு:
தமிழகத்தில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை பொது சுகாதாரத்
துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப் பணித்துறையுடன் இணைந்து
செயல்படுத்த ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.