தினமணி 14.08.2013
தினமணி 14.08.2013
“மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை’
குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டாரை பொருத்தி
குடிநீரை உறிஞ்சினால், இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று செந்தாரப்பட்டி
பேரூராட்சித் தலைவர் ஆர்.மாலினி ரமேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
செந்தாரப்பட்டியில் குடிநீர் இணைப்புகளில் சட்டத்துக்குப் புறம்பாக மின்
மோட்டார்களை பொருத்தி பலர் குடிநீரை உறிஞ்சுவதாக தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மின் மோட்டார் பறிமுதல்
செய்யப்படுவதுடன், அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு அபராதமும்
விதிக்கப்படும் என்றார் மாலினி ரமேஷ்.