தினமலர் 19.09.2013
மீண்டும் வந்தது “நிலவேம்பு’ கசாயம்
மதுரையில் “டெங்கு’ தீவிரத்தை தடுக்க, மாநகராட்சி மருத்துவமனைகளில் “நிலவேம்பு’ கசாயம் கொடுக்கும் முறை, நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. 2012 ஜூனில் டெங்கு பாதிப்பை தடுக்க, நிலவேம்பு கசாயத்தை அரசே பரிந்துரை செய்தது. மாநகராட்சி மருத்துவமனைகளில், இலவசமாக கொடுக்கப்பட்டது.
தற்போது மீண்டும் “டெங்கு’ பீதி தொற்றியுள்ளதால், மாநகராட்சி மருத்துவமனைகளில் மீண்டும் “நிலவேம்பு’ கசாயம் வழங்கும் முறை, நேற்று தொடங்கப்பட்டது. புதுஜெயில் ரோட்டில் உள்ள தேவசகாயம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், கலெக்டர் சுப்ரமணியன், கமிஷனர் நந்தகோபால் ஆகியோர், கசாயத்தை குடித்து, தொடங்கி வைத்தனர். “டெங்கு’ காய்ச்சல், குழந்தைகளை குறிவைக்கும் நோய் என்பதால், குழந்தைகளுக்கு கட்டாயம், நிலவேம்பு கசாயம் கொடுக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால் கொடுக்கும் தாய்மார்களும், கசாயம் குடிப்பதால், குழந்தையின் நலன் பாதுகாக்கப்படும். “டெங்கு’ கூட்டம் எங்கு?தேடி அலைந்த சிரியர்கள்மதுரையில் “டெங்கு’ காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் நடந்த இடத்தை தேடி தலைமையாசிரியர்கள் அலைந்தனர்.டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் மதுரையில் ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநகராட்சி கூட்ட அரங்கில், மாலை 4 மணிக்கு நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் அங்கு செல்ல, மடீட்சியா அரங்கிற்கு கூட்டம் மாற்றப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கும் செல்ல, பொருளாதார கணக்கெடுப்பு தொடர்பாக ஒரு கூட்டம் நடந்துகொண்டிருந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:கூட்டம் எங்கு நடக்கிறது என ஏற்பாடு செய்தவர்கள் தெளிவாக தெரிவிக்கவில்லை. இடங்களை மாற்றி மாற்றி தெரிவித்தனர். அதிகாரிகளிடம் கேட்டால், மடீட்சியா அரங்கில் தான் நடக்கிறது. ஏற்கனவே ஒரு கூட்டம் அங்கு நடந்தது. அது முடியும் வரை காத்திருங்கள் என்றனர். இதனால், 2 மணிநேரம் காத்திருந்து பங்கேற்றோம், என்றனர்.
அரசு மருத்துவமனையில்தட்டுப்பாடின்றி மருந்து:டீன் மோகன்””மதுரை அரசு மருத்துவமனையில் மருந்துகள், தடையின்றி கிடைக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக,” டீன் மோகன் தெரிவித்தார்.இம்மருத்துவமனையில் சில நாட்களாக காய்ச்சல், தலைவலி, ரத்தஅழுத்தம் போன்றவற்றிக்கு தரப்படும் மாத்திரைகள் இருப்பில் இல்லை. பெண்களுக்கான தைராய்டு மாத்திரைகளும் கிடைக்கவில்லை. இதனால், நோயாளிகள் வெளியில் விலைக்கு வாங்க வேண்டியிருந்தது.
டீன் மோகன் கூறியதாவது: தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் இருந்து, இந்த காலாண்டிற்கான (ஜூன் – செப்.,வரை) மருந்துகள் வினியோகம் குறைந்ததால், பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது ரத்தஅழுத்த மாத்திரை, குளுகோஸ் பாட்டில்கள் உட்பட அத்தியாவசிய மருந்துகள், 15 நாட்களுக்கு தேவையான அளவு, சேவை கழகத்திடம் இருந்து வாங்கியுள்ளோம். கிடைக்காத சில மருந்துகளை இங்கேயே வாங்குவதற்கு, தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளோம். அடுத்த காலாண்டிற்கு தேவையான மாத்திரைகள் அளவை,ஏற்கனவே தெரிவித்து விட்டதால், இனி தட்டுப்பாடு இருக்காது, என்றார்.