தினமணி 03.09.2009
சமூக பாதுகாப்பு திட்டம் “திருப்பூர் மாவட்டத்துக்கு ரூ.2.08 கோடி ஒதுக்கீடு: ரூ.96.60 லட்சம் அனுமதி‘
திருப்பூர், செப்.2: சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட த்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.2.08 கோடி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு, அதில் இதுவரை ரூ.96.60 லட்சம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப் படும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங் களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் 2009-10-ம் நிதியாண் டில் இதுவரை ரூ.2 கோடியே 08 லட்சத்து 80 ஆயிரம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் பொதுப்பிரிவில் 565 பயனாளிகள் பயனடையை ரூ.1.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 292 பயனாளிகளுக்கு ரூ.58.40 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு உள்ளடக்க திட்டத்தின் கீழ் 406 பயனாளிகளுக்கு ரூ.81.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுவரை 186 பயனாளிகளுக்கு ரூ.37.20 லட்சம் வழங்கப்பட்டு ள்ளது.
அதேபோல், ஈ.வெ.ரா.மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டத்தில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் பொதுப்பிரிவில் 32 பயனாளிகள் பயனடைய ரூ.6.40 லட்சமும், சிறப்பு உள்ளடக்க திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.1.80 லட்சமும் ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ளது. அதில் பயனாளிகளுக்கு தொகை வழங்க அரசு உத்தரவு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.
மேலும் அஞ்சுகம் அம்மையார் கலப்பு திருமண நிதி உதவித் திட்டத்தில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் 24 பயனாளிகள் பயனடைய ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுவரை 4 பயனாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறு மண ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.20 ஆயிர ம் வீதம் 4 பயனாளிகள் பயனடையை ரூ.80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஒரு பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்ட த்தில் 5 பயனாளிக்கு ரூ.80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப் பட்டு தொகை அனுமதிக்கு அரசு உத்தரவு எதிர்ப்பார்க் கப்பட்டுள்ளது.
மேலும் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவுஇலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் மற்றும் சிவ காமி அம்மையார் நினைவு பெண்குழந்தைகள் பாதுகாப் புத் திட்டத்துக்கும் ஒதுக்கீடு எதிர்ப்பார்க்கப்பட்டுள் ளதாக மாவட்ட சமூகநல அலுவலர்கள் தெரிவித்தனர்.